பங்குச் சந்தைகள் இன்று(பிப். 18) சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 83,553.59 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.40 மணியளவில் சென்செக்ஸ் 131.51 புள்ளிகள் குறைந்து 83,319.45 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 42.50 புள்ளிகள் குறைந்து 25,682.90 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
சென்செக்ஸ் குறியீட்டில் டாடா ஸ்டீல், ஐடிசி, எஸ்பிஐ, பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை 3.4 சதவீதம் வரை உயர்ந்து லாபமடைந்து வருகின்றன. நேர்மாறாக டெக் மஹிந்திரா, இன்ஃபோசிஸ், எச்சிஎல் டெக், டிசிஎஸ், அதானி போர்ட்ஸ் ஆகியவை 2.39 சதவீதம் வரை சரிந்து வர்த்தகமாகின்றன.
நிஃப்டி மிட்கேப் 100 குறியீடு சமநிலையில் உள்ள அதேநேரத்தில் ஸ்மால்கேப் குறியீடு 0.18 சதவீதம் உயர்ந்தது.
துறைகளில், நிஃப்டி மெட்டல் குறியீடு 0.87 சதவீதம், பொதுத்துறை வங்கி குறியீடு 1 சதவீதம், எஃப்எம்சிஜி 0.28 சதவீதம் அதிகரித்தது. அதேநேரத்தில் நிஃப்டி ஐடி குறியீடு 2.4 சதவீதம் சரிந்தது. ஆட்டோ, மீடியா, பார்மா, ரியல் எஸ்டேட் குறியீடுகளும் சரிவில் உள்ளன.
Summary
Stock Market: Sensex down 100 pts; Nifty below 25,700
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏற்றத்தில் பங்குச்சந்தை! ஆட்டோ, உலோகப் பங்குகள் உயர்வு! ஐடி பங்குகள் சரிவு!

சரிந்து மீளும் பங்குச்சந்தை! எண்ணெய் & எரிவாயுப் பங்குகள் சரிவு!

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! 24,000- க்குக் கீழ் நிஃப்டி! சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு!

பங்குச்சந்தை: 300 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்! நிஃப்டி 25,700!!
வீடியோக்கள்

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு


