உலகம் முழுவதும் யுடியூப் சேவை புதன்கிழமை தடைப்பட்டுள்ளதால் பயனர்கள் அவதியடைந்துள்ளனர்.
உலகம் முழுவதும் யுடியூப் சேவை புதன்கிழமை(பிப்.18) தடைப்பட்டுள்ளதால் அரைமணி நேரத்திற்கு மேலாக பயனர்கள் அவதிக்குள்ளாகினர்.
முகப்பு பக்கத்தை திறந்ததும் ஏதோ தவறு நடந்துள்ளது (Something Went Wrong) என திரையில் தெரிவதால் அரை மணி நேரத்திற்கு மேலாக பயனர்கள் விடியோ எதையும் பார்க்க முடியாமல் குழப்பமடைந்துள்ளனர். கடந்த 1 மணி நேரமாக(காலை 6.29 முதல்) இந்த பாதிப்பு தொடர்ந்து வருகிறது என 2,40,707 பேர் புகார் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், பிரச்னையை ஒப்புக்கொண்டுள்ள யுடியூப் நிறுவனம், பிரச்னையை சரிசெய்து வருவதாக தெரிவித்துள்ளது.
சீரானது யுடியூப் சேவை
உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் யுடியூப் முகப்பு பக்க சேவையில் பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் அது சீரானது.
சேவை பாதிப்பு குறித்த செய்திகள் பரவ ஆரம்பித்த நிலையில், அரை மணி நேரத்தில் பாதிப்பு சரிசெய்யப்பட்டதாக தகவல் வெளியானது. சீரானதாக பயனர்கள் சிலர் சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு வருகின்றனர்.
Summary
YouTube website service down... Users suffer!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்று வெளியாகிறது ஜனநாயகன்!

ஜெர்மனி செல்லும் அன்னவாசல் எடிசன்!

திருப்பூா் ஆா்எம்எஸ் அலுவலகத்தில் 24 மணி நேர விரைவுத் தபால் சேவை

குமரியில் கடல் நீா்மட்டம் தாழ்வு: 3 மணி நேரம் படகு சேவை பாதிப்பு
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0




