சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சிவகங்கை அருகே களைகட்டிய மாட்டு வண்டி பந்தயம்!

சிவகங்கை அருகே சொக்கநாதபுரத்தில் வியாழக்கிவமை நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம் குறித்து...

News image

சிவகங்கை மாவட்டம், சொக்கநாதபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் எல்லையை நோக்கி பாய்ந்து செல்லும் காளைகள்.

Updated On :19 பிப்ரவரி 2026, 6:34 am

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே சொக்கநாதபுரத்தில் மாட்டு வண்டி பந்தயம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மதகுபட்டி அருகே சொக்கநாதபுரம் சேவுகபெருமாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு இரண்டு பிரிவுகளாக மாட்டு வண்டி பந்தயம் நடத்தப்பட்டது.

இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் பெரிய மாடுகளுக்கு 8 கி.மீ. தொலைவும், சிறிய மாடுகளுக்கு 5 கி.மீ. தொலைவும் பந்தய எல்கைகளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

சொக்கநாதபுரத்தில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் எல்லையை நோக்கி பாய்ந்து செல்லும் காளைகள்.

சொக்கநாதபுரத்தில் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் எல்லையை நோக்கி பாய்ந்து செல்லும் காளைகள்.

பெரியமாடு, சிறியமாடு என இரு பிரிவுகளாக சொக்கநாதபுரத்திலிருந்து மதகுபட்டி மின்வாரிய அலுவலகம் வரை நடைபெற்ற இந்த மாட்டு வண்டி பந்தயத்தில், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மொத்தம் 42 ஜோடி மாடுகள் பங்கேற்றன.

பெரியமாடு பிரிவில் 14 ஜோடி மாடுகளும், சிறியமாடு பிரிவில் 23 ஜோடிகள் என மொத்தம் 28 ஜோடி மாடுகள் பங்கேற்றன.

விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளில் மாடுகள் ஒன்றை ஒன்று முந்திக் கொண்டு சீறிப்பாய்ந்து சென்றன.

இந்த பந்தயத்தில் முதல் நான்கு இடங்களை பிடித்த மாடுகளின் உரிமையாளர்களுக்கும் சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த பந்தயத்தை அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான மக்கள், ரசிகர்கள் சாலையின் இரு புறங்களிலும் நின்று உற்சாகமாக கண்டுகளித்தனர்.

Summary

Bullock cart race near Sivagangai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.