தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

ஃபிரிட்ஜ் வைக்கும் இடம் முக்கியம்! வாஸ்து இல்லை.. பாதுகாப்பு!

ஃபிரிட்ஜ் வைக்கும் இடம் மிகவும் முக்கியம். அதனை பராமரிப்பதும் அவசியம்.

ஃபிரிட்ஜ் பராமரிப்பு

Published On :

புதிதாக ஒரு ஃபிரிட்ஜ்ஜை வாங்கும்போது, அதனைப் பராமரிப்பதில் தனிக் கவனம் செலுத்தினால், பல ஆண்டுகள் நன்றாக உழைக்கும்.

அதனை எப்படி பராமரிப்பது என்று சில பயனுள்ள குறிப்புகள்,

முதலில் ஃபிரிட்ஜை காற்றோட்டம் உள்ள அறையில் வைக்க வேண்டும். பொதுவாக சமையல் அறையில் வைக்கக் கூடாது .

வெப்பத்தை அதிகமாக வெளியிடும் ஏ.சி. வெளிப்பெட்டி, அயர்ன் பாக்ஸ், அடுப்பு போன்றவற்றுக்கு அருகில் பிரிட்ஜ் இருக்கக் கூடாது.

ப்ரீசரில் உள்ள ஐஸ் கட்டிகள் பெரிதாகி எடுக்க முடியாவிட்டால் கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு எடுக்காமல் சிறிது கல் உப்பை தூவி வைத்து அது உருகியதும் எடுக்கலாம்.

எப்போதுமே, பிரிட்ஜை துடைக்கும்போது உலர்ந்த துணியில்தான் துடைக்க வேண்டும்.

சூடான பொருள்களை பிரிட்ஜ் உள்ளே வைக்கக் கூடாது.

பிரிட்ஜில் அவ்வளவாக பொருள்கள் இல்லை என்றுகூறி அடிக்கடி அணைத்து விடக்கூடாது. பிரிட்ஜில் அதிக பொருள்கள் இருந்தால் மின்சாரம் குறைவாகத் தேவைப்படும்.

தற்போது விற்பனைக்கு வரும் பிரிட்ஜ்களில் இன்பில்ட் ஸ்டெபிலைசர் அமைத்திருந்தாலும் அது மின்சாரத்தின் ஏற்ற இறக்கத்தை அத்தனை பக்குவமாகச் சமாளிக்காது. அதனால் தரமான ஸ்டெபிலைசர் பொருத்துவது நல்லது.

சுவரிலிருந்து சற்றுத் தள்ளி ஃபிரிட்ஜை வைக்கலாம். எக்ஸ்டென்ஷன்களைப் பொருத்தி ஃபிரிட்ஜை ஆன் செய்யக் கூடாது.

ஃப்ரீஜரில் ஐஸ் கட்டியாவதை அப்படியே விட்டுவிட வேண்டாம். அடிக்கடி ஃபிரிட்ஜ் மூடியை திறக்க வேண்டாம்.

ஃபிரிட்ஜ் சுவிட்சை அடிக்கடி போடுவதும் அணைப்பதும் கூடவே கூடாது. மின்சாரம் சீராக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஒருவேளை, ஏதேனும் வாயு கசிவு இருப்பதை உணர்ந்தால் உடனடியாக ஃபிரிட்ஜை அணைத்துவிட வேண்டும்.

ஃபிரிட்ஜில் குழந்தைகள் விளையாட அனுமதிக்க வேண்டாம், எரியும் வகையிலான பொருள்களை ஃபிரிட்ஜ் அருகே வைக்க வேண்டாம் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.