ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

சின்ன சின்ன டிப்ஸ்! உடலுக்கும் வீட்டுக்கும்!

சில சின்ன சின்ன குறிப்புகளை தெரிந்து வைத்துக் கொண்டால், வீட்டில் இருக்கும் எளிய பிரச்னையை கூட சரி செய்துவிடலாம்,

News image

பயனுள்ள சின்ன சின்ன டிப்ஸ் !

Updated On :28 பிப்ரவரி 2026, 11:02 am IST

சில சின்ன சின்ன குறிப்புகளை தெரிந்து வைத்துக் கொண்டால், வீட்டில் இருக்கும் எளிய பிரச்னையை கூட சரி செய்துவிடலாம், உடல் நலத்துக்கு மருந்தகங்களை நாடாமல் வீட்டிலேயே சரி செய்து கொள்ளலாம்.

முகம் பார்க்கும் கண்ணாடியை காகிதத்தில் துடைத்தால் நன்றாக இருக்கும்.

உப்புத் தண்ணீர் தெளித்துத் துடைத்தால் சாப்பாட்டு மேசையில் ஈக்கள் தொல்லை குறையும்.

சுத்தமான நெய்யில் ஒரு தேக்கரண்டி உப்பு கலந்து, கொதிக்க வைத்தால் நெய் கெடாமல் இருக்கும்.

எலுமிச்சைப் பழத் தோலை குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் நாற்றம் உண்டாகாது.

வெள்ளி நகைகள் பளபளப்பாக இருக்க, கடலை மாவும் எலுமிச்சைப் பழச்சாறும் கலந்து பசையாக்கித் தேய்த்தால் போதும்.

வெற்றிலைச் சாறுடன் கற்பூரம் சேர்த்து நெற்றிப் பொட்டில் பற்றிட்டால் தலைவலி நீங்கும்.

தும்பை இலைச் சாற்றை தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்து வந்தால் பேன்கள் ஒழியும்.

தரையைத் துடைக்கும்போது தண்ணீரில் இரு தேக்கரண்டி உப்பை போட்டு, துடைக்க ஈக்கள் பறந்தோடும்.

கால் பாதங்களில் தொடர்ந்து ஒரு வாரம் வேப்பெண்ணெய் தடவி வந்தால் பித்த வெடிப்பு சரியாகிவிடும்.

அத்திப் பழத்துடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி சரியாகும்.

பட்டுப் புடவைகளை உள்புறமாக மடித்துவைத்தால், ஜரிகை கறுத்து போகாமல் பாதுகாக்கலாம்.

-நெ.இராமகிருஷ்ணன், பொழிச்சலூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.