திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

ஃபிரிட்ஜை துடைக்க சோப்பு கூடவே கூடாதா? பிறகென்னதான் பயன்படுத்துவது?

ஃபிரிட்ஜை துடைக்கும்போது சோப்பு கூடவே கூடாது என்று கூறுகிறார்கள்.

News image

ஃபிரிட்ஜ் பயன்பாடு

Updated On :31 டிசம்பர் 2025, 4:00 pm IST

வீட்டின் சமையலறை மற்றும் அது தொடர்பான மின்சாதனங்கள் உள்ளிட்டவற்றை பராமரிப்பது குறித்த யோசனைகள் பலருக்கும் பிடித்தமானது. பராமரிக்க முடிகிறதோ இல்லையோ, ஒருமுறையாவது செய்து பார்த்து பெருமிதம் அடைய வேண்டும்.

அவ்வாறு அதிகம் வரும் சமையலறை பராமரிப்பு விவகாரங்கள் பற்றி..

உபயோகிக்காமல் இருக்கும் ஃபிளாஸ்க் டப்பாக்களில் சிறிது சர்க்கரையைப் போட்டு வைத்தால் துர்நாற்றம் அடிக்காது.

காஸ் அடுப்பில் பர்னரை 10 நிமிடங்கள் மண்ணெண்ணெயில் ஊறவைத்துப் பின்னர் பழைய டூத் பிரஷ் மூலம் சுத்தம் செய்யலாம்.

குக்கரின் கைப்பிடியில் இருக்கும் ஆணியில் மாதம் ஒருமுறை எண்ணெய்விட்டு வந்தால் துரு பிடிக்காமல் இருக்கும்.

நான்ஸ்டிக் பாத்திரங்கள் பயன்படுத்துவதை நிறுத்திவிடலாம். அல்லது புதிதாக வாங்கிய நான்ஸ்டிக் பொருள்களாக இருந்தால் மிருதுவான துணி கொண்டோ, ஸ்பாஞ்ச் கொண்டோ துடைக்க வேண்டும்.

கிரைண்டர் வாங்கும்போது கல் வெள்ளையாக இல்லாமல் கருப்புக் கல்லாக வாங்க வேண்டும்.

மிக்ஸியின் பிளேடுகள் மங்கிவிட்டால் கல் உப்பை ஒரு கைப்பிடி அளவு எடுத்து மிக்ஸியில் போட்டு ஒரிரு நிமிடங்கள் மிக்ஸியை ஓட்டவும். பிளேடுகள் கூர்மையாகிவிடும். பிளேடுகளில் தண்ணீர் தேங்கி துருப்பிடிக்கத் தொடங்கினாலும் இதைச் செய்யலாம்.

ஃபிரிட்ஜின் உள்பகுதியை சுத்தம் செய்யும்போது, கண்டிப்பாக சோப்புகளை உபயோகிக்கக் கூடாது. மாறாக, சோடா உப்பு கலந்த வெந்நீரை உபயோகிக்கலாம். புதிதுபோல மாறும்.

குக்கரின் காஸ்கட் தளர்ந்து போய்விட்டால் ஃபிரிட்ஜில் ஒருநாள் வைத்திருந்து பிறகு போட்டுப் பார்த்தால் சரியாக இருக்கும்.

நெ. ராமன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.