முகத்திலிருந்து எண்ணெய் வழிகிறதா? இதை முயற்சி செய்து பாருங்கள்!

எண்ணெய்ப்பசை சருமம் உள்ளவர்கள் வெள்ளரிக்காய் சாற்றை  முகத்தில் தடவி 15 நிமிடம்
முகத்திலிருந்து எண்ணெய் வழிகிறதா? இதை முயற்சி செய்து பாருங்கள்!
Published on
Updated on
1 min read

எண்ணெய்ப்பசை சருமம் உள்ளவர்கள் வெள்ளரிக்காய் சாற்றை முகத்தில் தடவி 15 நிமிடம் வைத்திருந்து பச்சை பயறு மாவைக் கொண்டு முகம் கழுவி வர முகத்தில் எண்ணெய் வழிவது சரியாகும்.

வாரத்தில் இரண்டு முறை இளநீரை முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசி 15 நிமிடம் வைத்திருந்து பின்னர் கழுவி விட  சரும நிறம் மாறும்.

பாதாம்  பருப்புகளைத் தோலுரித்து நன்றாக அரைத்து முட்டையின் வெள்ளைக் கருவையும் சில  சொட்டு எலுமிச்சம் பழச்சாற்றையும் கலந்து முகத்தில் தடவி ஊறிய பின் முகத்தை அலம்பினால் முகத்திலுள்ள கரும்புள்ளிகள்  மறையும்.

புதினா மற்றும் எலுமிச்சைச்சாறு  கலந்து முகத்தில் தடவி வர முகம் பொலிவு பெறும். 

பசும்பாலில் கசகசாவை ஒரு தேக்கரண்டி இரவில் ஊற வைத்து காலையில் நன்றாக அரைத்து தேய்த்து வர, முகத்தில் பொலிவு கூடும்.

சந்தனம்,  ஜாதிக்காய் இரண்டையும் சம அளவு இழைத்து  முகத்தில் தடவி வர, பருக்கள் மறைந்து முகம் பளபளக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com