முகத்தில் தேவையற்ற முடிகளை நீக்க...

பெண்கள் பலருக்கும் முகத்தில் தேவையற்ற முடிகள் இருக்கும். இதனை அகற்ற வேதியியல் சிகிச்சை முறைகளை நோக்கி பயணிப்பதும் அதிகரித்துக் காணப்படுகிறது.
முகத்தில் தேவையற்ற முடிகளை நீக்க...

பெண்கள் பலருக்கும் முகத்தில் தேவையற்ற முடிகள் இருக்கும். இதனை அகற்ற வேதியியல் சிகிச்சை முறைகளை நோக்கி பயணிப்பதும் அதிகரித்துக் காணப்படுகிறது. 

ஆனால், எந்தவித பக்கவிளைவும் இன்றி இயற்கையான முறையில் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கலாம். 

ஒரு டீஸ்பூன் கடலை மாவு எடுத்து அதனை தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் அப்ளை செய்து ஒரு 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும். வாரத்திற்கு மூன்று முறை தொடர்ந்து செய்துவர நல்ல பலன் கிடைக்கும். 

முகத்தில் மட்டுமின்றி கைகளில், அக்குள் பகுதியில் இருக்கும் முடிகளை நீக்கவும் இந்த பேஸ்டை பயன்படுத்தலாம். 

அழகுப் பொருள்களில் குறிப்பிடத்தக்க ஒன்று கடலை மாவு. சோப்பு, ஷாம்பூ என செயற்கை ரசாயனங்கள் வருவதற்கு முன்னதாக முன்னோர்கள் குளிப்பதற்கு சோப்புக்கு பதிலாக கடலை மாவை பயன்படுத்தினர்.

எனவே முடியை அகற்ற லேசர் சிகிச்சைகளுக்கு பதிலாக இந்த இயற்கை முறையை முயற்சியுங்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com