பொலிவான சருமத்தைப் பெற... சில எளிய குறிப்புகள்!

சரும அழகுக்காக இன்று மெனக்கெடுபவர்கள் அதிகம். அழகு நிலையங்கள், செயற்கை ரசாயனங்களை நாடாமல் இயற்கையான வழிகளில் சரும அழகை மேம்படுத்தலாம். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

சரும அழகுக்காக இன்று மெனக்கெடுபவர்கள் அதிகம். அழகு நிலையங்கள், செயற்கை ரசாயனங்களை நாடாமல் இயற்கையான வழிகளில் சரும அழகை மேம்படுத்தலாம். 

முகத்தில் கரும்புள்ளிகள், பருக்கள் இன்றி பொலிவாக சருமம் கிடைக்க இயற்கையான சில எளிய குறிப்புக்கள் இதோ..

சருமத்தை அழகாக்க எலுமிச்சைச் சாறு பெரிதும் பயன்படுகிறது. 

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். எலுமிச்சைச் சாற்றை அப்படியே பயன்படுத்தாமல் சில துளிகள் தண்ணீர் கலந்து பயன்படுத்த வேண்டும். இரு தினங்களுக்கு ஒருமுறை எலுமிச்சைச் சாறை முகத்தில் தடவிவர முகம் பொலிவு பெறும். 

அதுபோல மற்றொரு முறையாக, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு இவற்றை ஒன்றாகக் கலந்து முகத்தில் தடவவும். காய்ந்ததும் மெதுவாக பிய்த்து எடுத்தால் கலவையுடன் முடியும் வந்துவிடும். 

பால், கடலை மாவு, மஞ்சள் இவற்றை கலந்து முகத்தில் தடவி வந்தால் சருமம் பொலிவாக இருக்கும். 

தக்காளிச் சாறினை முகத்தில் தடவி வந்தாலும் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீக்கி முகம் பொலிவாகும். 

அதுபோல இரவு தூங்குவதற்கு முன்னதாக சில துளிகள் ஆலிவ் ஆயில் கொண்டு முகத்தில் தடவிவிட்டு காலையில் சோப்பு கொண்டு கழுவவும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க ஆலிவ் ஆயில் பெரிதும் பயன்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com