புரோக்கோலி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

முட்டைகோஸ் வகையைச் சேர்ந்த புரோக்கோலி, தோற்றத்தில் காலிப்ளவர் போன்று அடர்பச்சை நிறத்திலும் இருக்கும். அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்ட ஒரு காய்கறியாக இருக்கிறது.
புரோக்கோலி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

முட்டைகோஸ் வகையைச் சேர்ந்த புரோக்கோலி, தோற்றத்தில் காலிப்ளவர் போன்று அடர்பச்சை நிறத்திலும் இருக்கும். அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்ட ஒரு காய்கறியாக இருக்கிறது. பெரும்பாலாக சூப்பர் மார்க்கெட்டுகளில் மட்டும் கிடைப்பதால் சாதாரண மக்கள் பலருக்கும் இதுகுறித்து தெரிந்திருக்கவில்லை. 

புரோக்கோலியில் பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்துகள், பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, வைட்டமின் இ, வைட்டமின் கே, ஃபோலேட், சல்ஃபோரபேன் (Sulforraphane) உள்ளிட்டவை இருக்கின்றன. 

புரோக்கோலி நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றை குறைகிறது. 

ஆரோக்கியமான சருமத்திற்கும் தலைமுடி உதிர்வைத் தடுத்து முடி வளரவும் உதவுகிறது. 

இதன் இலைகளிலும் தண்டுகளிலும் உள்ள பினாலிக், ஆன்டிஆக்ஸிடன்ட்டாக இருப்பதால் புற்றுநோயைக் கட்டுப்படுத்துகிறது. 

பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதை இது குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க உறங்கும்போது எப்படிப் படுக்க வேண்டும்?

இதில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளை வலுப்படுத்துகிறது. 

நாள் ஒன்றுக்கு ஒரு கப் புரோக்கோலி சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான ஒட்டுமொத்த ஆற்றலும் கிடைத்துவிடும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். 

மேலும் இதிலுள்ள போஃலேட் இதய செயல்பாடுகளை மேம்படுத்தும். 

இதிலுள்ள வைட்டமின் கே, சரும பாதிப்புகளை சரிசெய்து சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. வைட்டமின் சி, நோயெதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. 

உடற்பருமனால் அவதிப்படுபவர்கள் புரோக்கோலியை தினமும் சாப்பிட்டு வர உடல் எடை குறையும். செரிமானத்தைத் தூண்டி உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுகிறது.

ஒமேகா - 3 கொழுப்பு அமிலங்களை கொண்டிருப்பதால் மூட்டு வலி நோயாளிகளுக்கு சிறந்த மருந்து. 

இதைவிட குறிப்பாக மன அழுத்தத்தைக் குறைக்கும் ஆற்றல் புரோக்கோலியில் உண்டு இதிலுள்ள சல்ஃபோரபேன் இந்த  வேலையைச் செய்கிறது. 

புரோக்கோலியை வேகவைத்து சாப்பிடுவது நல்ல பலன் தரும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்ணலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com