கூந்தல் உதிர்வைத் தடுக்க...

முடி உதிர்தல் பிரச்னை பொதுவாக ஆண், பெண் இரு பாலருக்கும் உள்ள பிரச்னை. இவற்றுக்கு வெந்தயம் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

முடி உதிர்தல் பிரச்னை பொதுவாக ஆண், பெண் இரு பாலருக்கும் உள்ள பிரச்னை. இவற்றுக்கு வெந்தயம் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.

பொதுவாக  தலைமுடி வேர்க்கால்களில் அதிக சூட்டினால் முடி உதிர்தல் ஏற்படும் அல்லது பொடுகு பிரச்னைகளால் முடி உதிரும். எனவே, இந்த இரண்டுக்கும் தீர்வாக  வெந்தயம் இருக்கும். 

6 முதல் 8 மணி நேரம் ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து எடுத்துக்கொண்டு அத்துடன் வைட்டமின் இ கேப்ஸுல், விளக்கெண்ணெய் 1 ஸ்பூன் ஆகியவற்றைக் கலக்கவும்.

இப்போது இந்த கலவையை இரவு நேரத்தில் தலையில் தடவி விட்டு காலை வெதுவெதுப்பான நீரில் ஷாம்பு போட்டு அலச வேண்டும். இரவு நேரம் முழுவதும் தலையில் தடவி வைத்திருக்க முடியாதவர்கள் காலையில் ஓரிரு மணி நேரம் தலையில் தடவி ஊறவைத்து பின்னர் குளிக்கலாம். வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை செய்தாலே போதுமானது. முடி உதிர்தல் பிரச்னை தீரும். 

வெந்தயத்தை சாதரணமாக 6 முதல் 8 மணி நேரம் ஊறவைத்து அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்துவர முடி உதிர்தல் சரியாகும். மேலும், முடி கருமையாக இருக்கும், அடர்த்தியாக வளரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com