சரும வறட்சியைப் போக்கும் இயற்கையான 'ஃபேஸ் பேக்'

குளிர்காலம் என்றாலே பெரும்பாலானோருக்கு சரும வறட்சி ஒரு பெரும் பிரச்னையாக இருக்கும். அப்படி பட்டவர்களுக்கு தர்ப்பூசணி ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

குளிர்காலம் என்றாலே பெரும்பாலானோருக்கு சரும வறட்சி ஒரு பெரும் பிரச்னையாக இருக்கும். அப்படி பட்டவர்களுக்கு தர்ப்பூசணி ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். 

குளிர் காலங்களில் உடலில் நீரின் அளவு குறைவதால் சரும வறட்சி ஏற்படுகிறது. சரும வறட்சியைப் போக்க நன்றாக தண்ணீர் அருந்த வேண்டும். 

அடுத்ததாக சரும வறட்சியை சரிசெய்ய தண்ணீர் அதிகமுள்ள பழங்களை சாப்பிட வேண்டும். சாப்பிடுவது மட்டுமின்றி, சருமத்தில் பேக் போடலாம்.

அதில் தர்பூசணி உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக்கூடிய ஒன்று. தர்பூசணி சிறிதளவு எடுத்து மசித்து அப்படியே முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். அத்துடன் சிறிது பால் சேர்த்தும் சருமத்திற்கு பேக் போடலாம். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். தர்பூசணியுடன் சிறிதளவு தயிர் சேர்த்தும் முகத்தில் தேய்த்து கழுவினால் முகம் ஜொலிக்கும். 

தர்பூசணி அழகைத் தந்து இளமையைத் தக்கவைக்க உதவுகிறது. சருமத்திற்கு நீரேற்றத்தை அளிப்பதால் சருமம் பொலிவாக காணப்படும். உடலுக்கு எப்படி ஊட்டச்சத்து தேவையோ அதுபோல சருமத்திற்கும் ஊட்டச்சத்துகள் தேவைப்படுகிறது.

இத்துடன் சருமத்தை அவ்வப்போது குளிர்ந்த நீரால் கழுவுவதும் சரும வறட்சியைப் போக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com