பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை! இறுக்கமான உள்ளாடைகள் அணியாதீர்கள்! 

பெண்களுக்கு ஆடை , அலங்காரம் என்றாலே பிரியம் தான். உடல் அமைப்பை அழகாக காட்டும் ஆடைகளையே விரும்புவார்கள்.
பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை! இறுக்கமான உள்ளாடைகள் அணியாதீர்கள்! 
Published on
Updated on
2 min read

பெண்களுக்கு ஆடை , அலங்காரம் என்றாலே பிரியம் தான். உடல் அமைப்பை அழகாக காட்டும் ஆடைகளையே விரும்புவார்கள். இதனால் உள்ளாடைகளையும் இறுக்கமாக அணிகிறார்கள். உள்ளாடைகளை இறுக்கமாக அணிவதால் பல இன்னல்களை சந்திப்பார்கள். இருப்பினும் அவர்கள் அதையே தொடர்ந்து செய்வார்கள். இப்படி இறுக்கமாக உள்ளாடை அணிவதால் ஏற்படும் பிரச்னைகளை பற்றி பார்க்கலாம்.

பெண்கள் கட்சிதமாக ஆடை அணிகிறோம் என்ற பெயரில் நிறைய பேர் இறுக்கமாக தான் உள்ளாடை அணிகிறார்கள். இதனால் நிறைய பேருக்கு அலர்ஜி ஏற்படுவதும் உண்டு. நாள் கணக்காக அரிப்பு ஏற்படும். எதனால் இப்படி ஏற்பட்டது என்று யாரும் கவனிப்பதும் இல்லை.

ரத்த ஓட்டம், நெஞ்செரிச்சல், அலர்ஜிகள் என இறுக்கமாக உள்ளாடை அணிவதால் பல உடல்நல பிரச்னைகள் ஏற்படுகின்றன. இறுக்கமாக உள்ளாடை அணிவதால் சீரான ரத்த ஓட்டம் தடைப்படுகிறது. இதனால் அவ்விடத்தில் இருக்கும் நரம்புகள் உணர்ச்சியற்று போக வாய்ப்புகள் இருக்கின்றன.

சீரான ரத்த ஓட்டம் தடைப்படும் போது அவ்விடத்தில் இருக்கும் திசுக்கள் இறந்து போக கூடும். எரிச்சல், அலர்ஜி போன்றவை ஏற்படவும் இறுக்கமான முறையில் உள்ளாடை அணிவது ஓர் காரணமாக அமைகிறது. தினமும் இவ்வாறு நீங்கள் அணிவதால் உடல்நல அபாயங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். எனவே, இறுக்கமான முறையில் உள்ளாடை அணிய வேண்டாம்.

சிலர் உள்ளாடையை வயிறு வரை ஏற்றி இறுக்கமாக அணிவார்கள். இது வயிறு பகுதியை மிகவும் கடினமாக உணர செய்யும். இதனால் ஏற்படும் அமில எதிர்வினையின் காரணமாக நெஞ்செரிச்சல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அவ்விடத்திற்கும் காற்றோட்டம் தேவை. இறுக்கமாக உள்ளாடை அணிவதால் காற்றோட்டம் தடைப்படுகிறது.

இதனால் வியர்வை அதிகம் வெளிப்பட்டு அவ்விடத்திலேயே தங்கி பாக்டீரியா தொற்று ஏற்படும் அபாயமும் உண்டு. மிக இறுக்கமாக உள்ளாடை அணிவதால் பெண்களுக்கு சிறுநீர் குழாய் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறதாம். இதற்கு காரணம் காற்று புகாத வண்ணம் உள்ளாடை அணிவதே ஆகும். இது மெல்ல மெல்ல ஈஸ்ட் தொற்று ஏற்பட காரணமாகவும் அமைகிறது.

சில குறிப்பிட்ட துணி ரகங்களில் தயாரிக்கப்படும் உள்ளாடைகளை இறுக்கமாக அணிவதால் சரும நோய்கள் ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கின்றன. முக்கியமாக நைலான் போன்றவை ஆகும். சிவந்த தடுப்புகள், சருமம் பழுத்து காணப்படுதல் போன்றவை ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

Image Courtesy - Google Images

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com