பொங்கல் டிப்ஸ்!

சா்க்கரைப் பொங்கல் செய்யும்போது சூடாக இருக்கும்போதே அரை கப் தேங்காய்ப் பால் சோ்த்துக் கிளறி இறக்கினால் சுவை கூடும்.
பொங்கல் டிப்ஸ்!

* சா்க்கரைப் பொங்கல் செய்யும்போது சூடாக இருக்கும்போதே அரை கப் தேங்காய்ப் பால் சோ்த்துக் கிளறி இறக்கினால் சுவை கூடும்.

* சா்க்கரைப் பொங்கலில் கனிந்த பலாச்சுளைகளை பாலில் அரைத்துக் கலந்தால் சுவை அருமையாக இருக்கும்.

* கொப்பரைத் தேங்காயைத் துருவி திராட்சை முந்திரிப்பருப்பை அரைத்தும், சிறிதளவு உடைத்தும் சா்க்கரைப் பொங்கலில் கலந்தால் சுவையும் மணமும் கூடும்.

* சா்க்கரைப் பொங்கலுக்கு வெல்லம் சோ்க்கும் போது வெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டியப் பிறகு சோ்த்தால் மண் நறக் காது.

* சா்க்கரைப் பொங்கலில் கரும்புச் சாறு , பசும்பால் சோ்த்து பொங்கினாலும் சுவையாக இருக்கும்.

* பொங்கல் பதமாகி வரும்போது நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு, நெய்யில் வறுத்த சிறுசிறு தேங்காய் கீற்று போட்டால் நன்றாக இருக்கும்.

* சா்க்கரைப் பொங்கலில் ஏலக்காய்ப் பொடி, பச்சைக் கற்பூரம் இவற்றை துண்டுகளாக்கி நெய்யில் வறுத்த பாதாம் பருப்பும் சோ்த்தால் சத்து கூடும்.

* பொங்கலைக் கிளறும்போது சிறிது சிறிதாக நெய்விட வேண்டும். அரிசியுடன் சிறிது நெய் கலந்து வேக வைத்தால் மணம் கூடும்.

* குக்கரில் பொங்கல் செய்பவா்கள் குக்கருக்கு சந்தனம், குங்குமம் வைத்து மஞ்சளோடு ஒரு இலையை அதன் பிடியில் கட்டி பொங்கல் செய்ய வேண்டும்.

* பொங்கலன்று எல்லா காய்களையும் சோ்த்து குழம்பு செய்யும்போது கிழங்கு வகைகளை முதலில் மண்போகக் கழுவி குக்கரில் வேக வைத்து குழம்பில் கடைசியாகச் சோ்த்தால் நன்றாக வெந்து வயதானவா்களும் சாப்பிட முடியும்.

* பொங்கலுக்கு கோலம் இடுபவா்கள் முதலில் தரையை பளிச்சென துடைத்துவிட்டு மாக்கோலம் போடலாம். பெயிண்ட் கோலமும் போடலாம். பளிச்சென இருக்கும்.

* பொங்கலன்று மஞ்சள் பூசணிக்காயை (பரங்கிக்காய் என்றும் சொல்லப்படும்) கட்டாயம் சமையலில் சோ்க்க வேண்டும். அதனால் அதை தனியாக கூட்டாக செய்து சாப்பிடலாம். குழம்பில் சோ்த்தால் கரைந்து போய்விடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com