பேடன்ட் உள்ளிட்ட அறிவுசார் சொத்துரிமைகளைப் பதிவு செய்ய ஒரு வழிகாட்டி!

அண்ணா பல்கலைக் கழகத்தில் அறிவுசார் சொத்துரிமையைப் பதிவு செய்வதற்கான வழிகாட்டும் மையம் அமைந்துள்ளது. 
பேடன்ட் உள்ளிட்ட அறிவுசார் சொத்துரிமைகளைப் பதிவு செய்ய ஒரு வழிகாட்டி!

அண்ணா பல்கலைக் கழகத்தில் அறிவுசார் சொத்துரிமையைப் பதிவு செய்வதற்கான வழிகாட்டும் மையம் அமைந்துள்ளது. 
அறிவுசார் சொத்துரிமை என்பது காப்புரிமை, வர்த்தக குறியீடு (முத்திரை), பதிப்புரிமை ஆகியவை ஆகும். 
காப்புரிமை (பேடன்ட்) - ஒரு நபரோ, நிறுவனமோ, ஆராய்ச்சி நிறுவனமோ, கல்வி நிறுவனங்களோ மக்களுக்கு பயன்படும் ஒரு புதிய பொருளை கண்டுபிடிக்கும்பட்சத்தில் அதனை தாம் தான் கண்டுபிடித்தோம் என்பதற்கான உரிமையை பதிவு செய்வது தான் காப்புரிமை என்பதாகும்.   இதில் புதிய கண்டுபிடிப்புகள், ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டவற்றில் வடிவமைப்பை மாற்றி, அதனுடைய திறனை மேலும் அதிகரிக்கச் செய்தல்,  பொருளை உருவாக்கும் வழிமுறைகள், அதில் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள் உள்ளிட்டவை காப்புரிமைக்கு உட்பட்டவையாகும்.  அதனைக் கண்டுபிடிப்பவர் தன்னுடைய கண்டுபிடிப்பு எனப் பதிவு செய்யலாம்.   அவ்வாறு பதிவு செய்யும்பட்சத்தில் ஒரு நபர் கண்டுபிடித்ததை மற்றவர்கள் கண்டுபிடித்ததாகக் கூற முடியாது.
வர்த்தகக் குறியீடு (முத்திரை) -  ஒரு நிறுவனத்தின் பெயரை குறிப்பிடும் முத்திரை அல்லது வர்த்தகக் குறியீடு மற்றும் லோகோ எனப்படும் இலச்சினை ஆகியவை டிரேட் மார்க் என்பதாகும்.  ஒரு நிறுவனத்தின் பதிவு செய்யப்பட்ட வர்த்தகக் குறியீட்டை (முத்திரை) வேறு நிறுவனங்கள் பயன்படுத்த முடியாது.   அந்த வர்த்தக முத்திரையை பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும்.
பதிப்புரிமை -  வரை படங்கள், மாதிரிகள், புத்தகங்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகள், ஓவியங்கள், புகைப்படங்கள், கட்டுரைகள், திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், பாட்டுகள் போன்றவற்றை உருவாக்கியவர்கள் தம்முடையது எனப் பதிவு செய்வார்கள்.  அவர்களுடைய அனுமதியின்றி அதனைப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும்.   அதனை அச்சடிக்க பதிப்புரிமை பெற்றவரிடமிருந்து அனுமதி பெற வேண்டும். 
இவ்வாறான அறிவுசார்  சொத்துரிமை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும், வழிகாட்டுதல் உதவிகளையும் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் அறிவுசார் சொத்துரிமை மையம் வழங்குகிறது.  
மேலும் தகவல்களுக்கு:  https://www.annauniv.edu/ipr/

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com