நானும் சாதாரண அம்மா தான்: சில்பா ஷெட்டி உற்சாகம்!
சோனி டி.வியின் டான்ஸ் ரியலிட்டி ஷோ ‘சூப்பர் டான்ஸர்’இதில் ஷில்பா ஷெட்டி, டைரக்டர் அனுராக் காஷ்யப், கொரியோகிராபர் கீதா கபூர் உள்ளிட்டோர் நடுவர்களாகப் பங்கேற்று வருகின்றனர். வரப்போகும் குழந்தைகள் தினவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்த நிகழ்ச்சியின் ஸ்பெஷல் எபிசோட் திட்டமிடப்பட்டிருக்கிறது, அதில் ஷில்பாவின் 4 வயது மகன் வியான் நடனமாடவிருக்கிறாராம். இதைப் பற்றி ஷில்பா நிருபர்களிடம் பகிர்ந்து கொண்ட செய்தி, தான் ஒரு நடிகை, மேடையோ, டி.வி, ரியாலிட்டி ஷோ நடன நிகழ்ச்சிகளோ தனக்குப் புதிதில்லை என்றாலும் தனது மகன் முதல் முறையாக மேடையில் நடனமாடப் போவதை நினைக்கும் போது சாதாரணமாக மற்ற அம்மாக்களைப் போலவே தனக்கும் மிகுந்த பரபரப்பும், உற்சாகமும் தொற்றிக் கொள்வதாகவே உணர்வதாக தெரிவித்திருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.