மகள் ஜான்வி தன்னைப் போல இல்லாததில் ஸ்ரீதேவிக்கு வருத்தம்! 

இந்தத் தலைமுறை பெண்கள் சுயமாக முடிவெடுக்காமல் ‘அம்மாவைக் கேளுங்க’ என்று சொன்னால் தான் அது ஆச்சரியமே தவிர ஜான்வி தான் தோன்றித் தனமாக முடிவெடுப்பதில் என்ன பெரிய ஆச்சர்யத்தைக் கண்டீர்கள் என்கிறீர்களா?!
மகள் ஜான்வி தன்னைப் போல இல்லாததில் ஸ்ரீதேவிக்கு வருத்தம்! 
Published on
Updated on
1 min read

பாலிவுட்டில் அடுத்தடுத்து அறிமுகமாகவிருக்கும் இளம் நடிகைகளில் அம்ரிதாசிங், சயிஃப் அலிகான் மகள் சாரா அலிகானும், ஸ்ரீதேவி, போனி கபூர் வாரிசு ஜான்வி கபூரும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இருவரில் ஸ்ரீதேவியின் புகழ் ஒரு காலத்தில் தென்னிந்தியாவிலிருந்து வட இந்தியா வரை மொத்த இந்தியாவையும் அடக்கி ஆண்டதால் இந்தியத் திரையுலகம் அவரை ஒரு லேடி சூப்பர் ஸ்டார் ரேஞ்சில் கொண்டாடித் தீர்த்தது. எனவே இருவரில் ஜான்வி கபூரின் பாலிவுட் பிரவேஷம் தான் மிகுந்த பரபரப்புடன் ரசிகர்களால் கவனிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. 
இந்நிலையில் இருவரது அம்மாக்களுமே ஆரம்பத்தில் தங்களது வாரிசுகளுக்கு திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வமில்லை எனவும், மிக இளையவர்களான அவர்கள் தற்போது மிகுந்த கவனம் செலுத்த வேண்டியது அவர்களின் கல்வியில் தான் என்றும் ஊடக நேர்காணல்களிலும், திரை விழாக்களிலும் வாய்ப்புக் கிடைக்குப் போதெல்லாம் கூறி வந்தனர். ஆனால் தற்போது இருவரது வாரிசுகளும் தங்களது அம்மாக்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்கி இருப்பது அவர்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம்
 ஸ்ரீதேவி தென்னிந்திய திரைப்பட உலகில் இருந்து பாலிவுட்டுக்கு நடிக்கச் சென்ற போது மிகவும் இளையவராகத் தான் இருந்தார். அப்போது அவரை பேட்டிக்காகவோ, கால்ஷீட்டுக்காகவோ எதற்காக யார் அணுகினாலும் ஸ்ரீதேவி சொல்லும் ஒரே பதில் ‘அம்மாவைக் கேளுங்க’ என்பதாகத் தான் இருந்தது. தனது அம்மா இறக்கும் வரை கூட ஸ்ரீதேவி இதே பதிலைத் தான் சொல்லிக் கொண்டிருந்ததாக ஞாபகம். ஆனால் அவரது மகளான ஜான்வி கபூர் இந்த விசயத்தில் தன் அம்மா ஸ்ரீதேவியைப் பின்பற்றவில்லை. திரைப்பிரவேஷம் ஆகட்டும், தனிப்பட்ட வாழ்வில் தனது ஆண் நண்பர்கள் பற்றிய தகவல்கள் ஆகட்டும் எதிலும் தானே சுயமாக முடிவெடுக்கக் கூடியவராக இருக்கிறார் என சமீபத்திய வட இந்திய ஊடகச் செய்திகள் கூறி வருகின்றன. இப்போது ஸ்ரீதேவி மகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதித்திருப்பதோடு அவரைக் குறித்து மிகுந்த மனவருத்தத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இதில் ரசிகர்கள் கருத்தாக சொல்ல என்ன இருக்கிறது? இந்தத் தலைமுறை பெண்கள் சுயமாக முடிவெடுக்காமல் ‘அம்மாவைக் கேளுங்க’ என்று சொன்னால் தான் அது ஆச்சரியமே தவிர ஜான்வி தான் தோன்றித் தனமாக முடிவெடுப்பதில் என்ன பெரிய ஆச்சர்யத்தைக் கண்டீர்கள் என்கிறீர்களா?!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com