விட்டமின் ‘E' வேண்டுமா அப்போ வெஜ் சாலட்டில் முட்டை சேர்த்து சாப்பிடுங்க!

காய்கறிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் வெஜிடபிள் சாலடுகளில் வேக வைத்த முட்டையைக் கலந்து சாப்பிடுவதால் நமது உடலில் விட்டமின் ‘E' உட்கொள்ளும் சதவிகிதம் அதிகரிப்பதாக சமீபத்திய உணவு ஆராய்ச்சிக் கட்டுரை ஓன்று
விட்டமின் ‘E' வேண்டுமா அப்போ வெஜ் சாலட்டில் முட்டை சேர்த்து சாப்பிடுங்க!
Updated on
2 min read

இடியாப்பத்துக்கு பாயாவோ, தேங்காய் பாலோ எதாவது ஒன்று தொட்டுக் கொள்ள இருந்தால் தான் அது ருசிக்கும். மிளகுப் பொங்கலென்றால் கட்டாயம் மணக்க மணக்க சாம்பாரையும், தேங்காய்ச் சட்னியையும், கூடுதலாக இரண்டு மெதுவடையையும் உள்ளே தள்ளினால் தான் பொங்கல் ’டிவைன்’ என்று சொல்லிக் கொள்ளும் படி சுவை கூட்டித் தரும். போலவே பிரியாணிக்கு ரைத்தா மட்டும் போதாது கூடவே கத்தரிக்காய் கொத்சுவோ, சால்னாவோ இருந்தால் தான் சிலருக்குத் திருப்தியாகச் சாப்பிட முடியும். எதற்காக இத்தனை பீடிகை என்ற யோசனை வருகிறதா? அதாவது இந்தியர்களான குறிப்பாக தமிழர்களான நாம் ருசித்துச் சாப்பிடுவதில் சமர்த்தர்கள். ஏனோ தானோவென்று வெந்ததும், வேகாததுமாக நம்மால் உணவை அள்ளி வாயில் போட்டுக் கொள்ள முடியாது. இதனுடன் இதைக் கலந்து சாப்பிட்டால் தான் ருசி அபாரமாக இருக்கும் என்று நாம் சில அட்டவணைகளை பின்பற்றக் கூடியவர்களாகவே எப்போதும் இருக்கிறோம். இது ஒரு வகையில் நல்லது தான் என்கிறது வெளி நாட்டு மருத்துவப் பல்கலைக் கழகம் ஒன்றின் ஆய்வுக் கட்டுரை. 

உணவே மருத்துவம் எனும் கொள்கையில் ஊறிப் போனவர்கள் நாம். சாப்பிடக் கூடிய அனைத்துமே உடலுக்கு நன்மை தரக் கூடியது தானா? எனும் விழிப்புணர்வு கடந்த வருடங்களைக் காட்டிலும் தற்போது அதிகரித்து வருவது உண்மை. அதனடிப்படையில் தனித் தனி உணவுகளை மிகுதியாக உண்பதைத் தவிர்த்து இப்போதெல்லாம் திட உணவு கொஞ்சம், அவற்றோடு மிகுதியாக வேக வைத்த காய்கறிகள், பழங்கள் மற்றும் நட்ஸ் என்று சொல்லப்ப்படும் விதைகள் எல்லாம் சேர்த்து கலவையாகவே உண்பதற்குப் பழகியிருக்கிறோம். இதனால் உடலில் கார்போ ஹைட்ரேட், புரோட்டின், ஃபேட் எல்லாம் தனித்து மிகுவதை தடுத்து உடல் நலனுக்கு உகந்த எல்லாச் சத்துக்களும் சரிவிகித அளவில் கிடைக்க வழி செய்திருக்கிறோம். இந்த வரிசையில்;

காய்கறிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் வெஜிடபிள் சாலடுகளில் வேக வைத்த முட்டையைக் கலந்து சாப்பிடுவதால் நமது உடலில் விட்டமின் ‘E' உட்கொள்ளும் சதவிகிதம் அதிகரிப்பதாக சமீபத்திய உணவு ஆராய்ச்சிக் கட்டுரை ஓன்று விவரிக்கிறது. அதாவது இதுவரை நாம் அறிந்திருந்தது என்னவெனில் எண்ணெய் வித்துக்கள் மற்றும் முந்திரி, பாதாம் போன்ற நட்ஸ்களில் மட்டும் தான் விட்டமின் ‘E' அதிகமிருக்கும் என்று, ஆனால் மேற்கண்ட ஆய்வறிக்கை சொல்வது என்னவெனில் வெள்ளரிக்காய், பிரக்கோலி, பெங்கலூரு தக்காளி, ஃப்ரெஷ் கீரை வகைகள் போன்ற காய்கறிகளுடன் பாதாம், ஹஸல்நட் உள்ளிட்ட குறைவான கொழுப்புச்சத்து கொண்ட  நட்ஸ் வகைகளும் சேர்த்து தயாரிக்கப்படும் சாலட்டுடன் வேக வைத்த முட்டை கலந்து சாப்பிட்டால், காய்கறிகள் மற்றும் நட்ஸ்களில் இருந்து உடல் தனக்குத் தேவையான விட்டமின் ‘E' சத்தை வழக்கத்தை விட அதிகமாகவே உறிஞ்சிக் கொள்ளும் என்று அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்திலிருக்கும் பர்டியூ மருத்துவப் பல்கலைக் கழகத்தின் சத்துணவுத் துறைப் பேராசிரியர் வெய்ன் கேம்ப்பெல் தனது சமீபத்திய உணவு ஆராய்ச்சிக் கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com