
தையல் மற்றும் ஆடை வடிவமைப்பு பயிற்சி பெற்றவர்கள் அத்தொழிலில் ஈடுபட்டு நல்ல வருமானம் மற்றும் லாபம் ஈட்டலாம்.
ஆடையில்லா மனிதன் அரை மனிதன் என்ற பழமொழி வழக்கத்தில் இருக்கின்றது. தற்போது ஆடைக்குத் தரும் முக்கியத்துவத்தை எவரும் வேறு எதற்கும் தருவதில்லை. அந்த அளவுக்கு ஆடை மீதும், அழகு சாதனப் பொருட்கள் மீதும் ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி அதிக மோகம் உள்ளது.
தங்களுக்குரிய ஆடைகள் மிகவும் சிறப்பான வடிவமைப்பு உடையதாக இருக்க வேண்டுமெனக் கருதுகின்றனர். குறிப்பாக பெண்கள் தங்களுக்குரிய ஆடைகளைத் தேர்வு செய்வதில் அதிக நேரத்தைச் செலவிடுகின்றனர். அதனால் சிறந்த வடிவமைப்புடைய ஆடைகளை தேடித் தேடி வாங்குகின்றனர்.
அதே போல சிறந்த வடிவமைப்பில் ஆடைகளைத் தைக்கும் தையல் கலைஞர்களாக இருந்தால் அத்தகைய தையல் கலைஞர்கள் எங்கிருந்தாலும், அவர்களைத் தேடிச் சென்று தங்களுக்குத் தேவையான வடிவமைப்பில் தைத்துத் தர வேண்டுமென கூறி அவ்வாறு தைத்து வாங்குகின்றனர்.
இதிலிருந்தே மக்களுக்கு ஆடைகளின் மீதுள்ள ஈடுபாடு தெரிய வருகிறது. அதனால் தையல் கலைஞர்களுக்கும், ஆடை வடிவமைப்பாளர்களுக்கும் அதிக மவுசு உள்ளது. அதற்கான உரிய பயிற்சியைப் பெற்று அத்தகைய தொழிலில் ஈடுபடும்போது நல்ல வருமானமும், நல்ல லாபமும் கிடைக்கின்றது. அதனால் வேலையில்லாப் பட்டதாரிகள், இளம்பெண்கள் தையல் கலை மற்றும் ஆடை வடிவமைப்பு பயிற்சி பெறுவதின் மூலம் அது சம்பந்தமான தொழிலைத் துவங்கி நல்ல வருமானம் ஈட்டி வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.
தையல் மற்றும் ஆடை வடிவமைப்பு பயிற்சி நிறுவனங்களின் இணைய தளங்கள்:
http:chennaitailoringinstitute.in
www.smartskillss.com
www.chennaifashioninstitute.com
www.callatailor.in
www.mridulas.com
https:www.urbanpro.com
www.aruntailoringinstitute.com
www.sakthitailoringinstitute.in
masstailoringinstitute.in
www.inifdchennai.com
www.dreamzone.co.in
www.istitutomarangoni.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.