

ஹாலிவுட் டாப் ஸ்டார்கள் எல்லாம் அங்கு வெளியாகும் குழந்தைகளுக்கான அனிமேஷன் திரைப்படங்களில் விலங்குகள் மற்றும் தேவைதைகளுக்கு டப்பிங் குரல் கொடுப்பது வழக்கம். ஜாக்கி ஷான் கூட கார்ட்டுன் தொடர்களில் ஜாக்கியாகவே வரும் கதாபாத்திரத்துக்கு குரல் கொடுத்திருக்கிறார். இந்தியாவில் பிரபல நடிகர்களிடம் இந்தப் பழக்கம் இல்லையே என்ற வருத்தம் சிலருக்கு இருந்தது. அதைப் போக்குவதற்காகவோ என்னவோ சல்மான் கான் இந்த ஹனுமன் ஜெயந்தியை ஒட்டி வெளியாக இருக்கும் 'ஹனுமன் தி தாம்தர்' எனும் குழந்தைகளுக்கான அனிமேஷன் திரைப்படத்தில் வளரிளம் பருவத்து ஹனுமனுக்கு டப்பிங் பேசவிருக்கிறாராம்.
ஹிந்தி டாப் ஸ்டார்களில் ஒருவரான சல்மான் குரல் அவரது ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானது, அதோடு கடந்த வருடத்தில் வெளியான ‘பஜ்ரங்கி பாய் ஜான்’ படத்தின் வெற்றிக்குப் பின் சல்மானுக்கு குழந்தைகள் வட்டத்திலும் கணிசமான ரசிகர்கள் பெருகி விட்டனர். இந்த நேரத்தில் வளர்ந்து கொண்டிருக்கும் சின்ன ஹனுமானுக்காக சல்மான் டப்பிங் பேசுவது அவரது ரசிகர்களை மேலும் மகிழ்விக்கும். இனிமேல் சல்மானின் குரல் தியேட்டர்கள் தாண்டி இந்தி தெரிந்த அனைவரது வீட்டு வரவேற்பறைகளிலும் இந்த அனிமேஷன் தொடரால் ஒலிக்கவிருக்கிறது.
தமிழிலும் நமது சூப்பர் ஸ்டார்கள் இப்படியான ஒரு முயற்சியை மேற்கொண்டால் இங்கிருக்கும் ரசிகர்களும் தன்யவான்கள் ஆவார்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.