அலுவலகத்துக்குள் வந்த பாம்பு! அதிர்ச்சியடையாத பெண்

அலுவலக மேஜையில் எதிர்பாராத விருந்தினராக ஒரு பாம்பைப் பார்த்தால் ஒருவருக்கு
அலுவலகத்துக்குள் வந்த பாம்பு! அதிர்ச்சியடையாத பெண்
Published on
Updated on
1 min read

அலுவலக மேஜையில் எதிர்பாராத விருந்தினராக ஒரு பாம்பைப் பார்த்தால் ஒருவருக்கு எப்படி இருக்கும்? இத்தனைக்கும் அவர் வேலை பார்ப்பது காட்டிலாகாவில் இல்லை. '9 நியூஸ் டார்வின்’ என்ற செய்தி நிறுவன அலுவலகத்துக்குள் தான் இந்தப் பாம்பு வருகை தந்துள்ளது. அதற்கு உண்ட களைப்பு போலும். அலுவலகத்தில் வேலைப் பார்க்கும் கேட் லிமானின் மேஜையின் ஓரத்துக்குப் போய் செட்டில் ஆகிவிட்டது.

நாமெல்லாம் பாம்பை கண்டால் முதலில் அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டு யாரையாவது உதவிக்கு அழைப்போம். அல்லது மின்னல் வேகத்தில் அந்த இடத்திலிருந்து ஓடிவிடுவோம். ஆனால் கேட் லிமான் இந்த இரண்டையும் செய்யாமல் அந்த 2 மீட்டர் நீளமுள்ள பாம்பை அசால்டாகத் தூக்கி ஒரு பையில் போட்டு பேக் செய்துவிடுகிறார். இரண்டு நிமிடம் ஓடக் கூடிய இந்தக் காட்சியை பதிவு செய்து, Snakes in the News room என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கிலும் ஏற்றிவிட்டார். நியூஸ் ரூமில் நடக்கும் எதுவொன்றும் நியூஸ் தானே. பதிவிட்ட சில நிமிடங்களிலேயே வைரலாகிக் கொண்டிருக்கும் இந்த பாம்பு வீடியோ கிட்டத்தட்ட 17500 பார்வையாளர்களைக் கொண்டுள்ளது. 

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் இந்தப் பெண்மணி பாம்பை துளி பதற்றம் கூட இல்லாமல் பார்சல் செய்திருக்கிறார். இதுவே இந்தக் காணொலியில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விஷயமாக இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com