ஆன்லைனில் உங்களுக்கு பாதுகாப்பு இல்லையா? இதைப் படியுங்கள்!

சைபர் க்ரைம் தொடர்பான பிரச்னைகளை உடனுக்கு உடன் நிவர்த்தி செய்வதுதான்
ஆன்லைனில் உங்களுக்கு பாதுகாப்பு இல்லையா? இதைப் படியுங்கள்!
Published on
Updated on
2 min read

இணையதளம் இன்றளவும் பெண்களுக்கு ஆபத்தான ஒரு இடமாகவே இருக்கிறது. சைபர் க்ரைம் என்பது வெவ்வேறு வகையில் அவர்களை அச்சுறுத்தி வரும் நிலையில் இதனை எதிர்க்க கடுமையான சட்டங்கள் இல்லை என்பதும் நிஜம். இந்தியாவில் தகவல் தொழிநுட்பம் குறுகிய காலத்தில் மிகவும் வேகமாக வளர்ந்துவிட்டது.

சைபர் க்ரைம் என்றால் என்ன ?

இணையத்தின் மூலம் நடக்கும் குற்றச் செயல்களை சைபர் க்ரைம் எனலாம். இணைய வெளியில் பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் அத்துமீறி பேசுவது. ஈமெயில், சோஷியல் நெட்வொர்க்கில் அவர்கள் விரும்பாத போதும் பின் தொடர்ந்து தொந்திரவு செய்வது, ஃபோர்னோகிராபி, அவதூறு, ப்ளாக்மெயில் உள்ளிட்ட விஷமச் செயல்களை செய்வது இவை எல்லாம் பொதுவாகக் காணப்படும் சைபர் க்ரைம்கள். இவை பெண்களின் கண்ணியத்தை குலைக்கும் நோக்கம் உடையவை. கடுமையான சைபர் க்ரைம் சட்டங்கள் நடைமுறைப்படுத்தால் இவற்றை தவிர்க்க முடியும். 

இவற்றில் எல்லாம் கவனம் தேவை!

  • உங்களுடைய பர்சனல் விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
  • தேவையில்லாத விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
  • யாரிடமும் உங்கள் பாஸ்வேர்டை பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
  • இணையத்தில் மிரட்டும் நபர்களிடம் தொடர்ந்து பேசுவது, சர்ச்சையில் சிக்குவதை தவிர்த்து விடுங்கள்.
  • இணைய தளங்களில் கேட்கப்படும் சுய விபரங்களுக்கு பதில் அளிக்காதீர்கள்.
  • தேவைப்படும் போது ஆண்டி வைரஸ் செயலியை பயன்படுத்துங்கள்.

பாதுகாப்பது எப்படி?

  • உங்கள் பாஸ்வேர்டுகளில் எண்கள், ஆஸ்ட்ரிக் சிம்பல்கள் மற்றும் சில எழுத்துக்கள் உள்ளவாறு அமைத்துக் கொள்ளுங்கள்.
  • உங்கள் மெயிலை யாராவது ஹேக் செய்துவிட்டால் உடனடியாக அதை ஈமெயில் சேவை நிறுவனத்தினரிடம் தெரியப்படுத்துக்கங்கள். தேவைப்படும் எனில் போலீஸிலும் புகார் அளிக்கலாம். ஆனால் இன்னொரு ஹேக்கரிடம் உதவி பெற வேண்டாம். அது மேற்கொண்டு சிக்கலை அதிகரிக்கவே செய்யும். 
  • ஃபேஸ்புக் உள்ளிட்ட சோஷியல் மீடியாவைப் பொருத்தவரையில், அக்கவுண்ட் செட்டிங்ஸ், செக்யூரிட்ட பேஜில் உங்களுடைய தகவல்கள், புகைப்படங்கள் போன்றவற்றை க்ளோஸ் ப்ரெண்ட்ஸ் மட்டும் (Close friends only) என்ன செட்டிங்கில் வைத்துக் கொள்ளுங்கள். ஒன்லி மீ என்றும் ஒரு ஆப்ஷன் உண்டு.
  • சைபர் க்ரைம் தொடர்பான பிரச்னைகளை உடனுக்கு உடன் நிவர்த்தி செய்வதுதான் புத்திசாலித்தனம். இதற்கு சென்டர் ஃபோர் சைபர் க்ரைம் விக்டிம் கவுன்சலிங்கிடம் உதவி பெறலாம் (www.cybervictims.org).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com