இயற்கை மூலிகை வாசம் பரப்ப வந்துள்ள எலெக்ட்ரிக் சாம்பிராணி கரண்டி!

சிராக்கை பயன்படுத்தி வேப்பிலை புகை போடுவதால் சுவாசக் கோளாறு மற்றும் கொசுத் தொல்லையிலிருந்து விடுதலைக் கிடைக்கும்.
இயற்கை மூலிகை வாசம் பரப்ப வந்துள்ள எலெக்ட்ரிக் சாம்பிராணி கரண்டி!

எல்லா சம்பிரதாயத்தினராலும் ஏக மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது அன்றாட சாம்பிராணி புகை போடும் பழக்கம், வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புடைய இந்த பழக்கத்தை இன்றைய நாகரீக உலகில் நாம் மறந்தே போய் விட்டோம், இன்றைய வேகமான இயந்திரமய வாழ்க்கையில் கரிக்கு எங்கே போவது அதை ஊதி ஊதி நெருப்பக்கி எப்போது சாம்பிராணி போடுவது? 

ஆன்மீக சிந்தனையுடன் கூடிய இந்த அறிவியல் பழக்கத்தை தன் கண்டுபிடிப்பின் மூலம் மிகவும் எளிதாக்கி இருக்கிறார்  இந்தப் பொறியியல் பட்டதாரி, இவரது பெயர் கார்த்திக்குமார்.

இவரின் புதுமையான கண்டுபிடிப்பு கனல் என்ற பொருள் கொண்ட சிராக், இது மின்சாரத்தில் இயங்கும் கைக்கு அடக்கமான பல செயல் புரியும் இயந்திரம், மின் பொத்தானை அழுத்திய 5 நிமிடங்களில் சிராக்கின் தட்டு சூடேறுகிறது, சூடேறிய தட்டின் மேல் சாம்பிராணியைப் போட்டதும் நொடி பொழுதில் ஆவியாக்குகிறது. கரி தேவை இல்லை நெருப்பு தேவை இல்லை சிரமப்பட தேவை இல்லை, சிராக்கை மின் இணைப்பிலிருந்து அகற்றி, புகை தேவைப்படும் இடத்திற்கெல்லாம் எடுத்து செல்ல பாதுகாப்பான மர கைப்பிடி கொடுக்கப்பட்டுள்ளது. 

சிராக் சாம்பிராணியை மட்டுமல்லாது, இயற்கை கொசு விரட்டிகளான வேப்பிலை மற்றும் நொச்சியிலைகளையும் ஆவியாக்குகிறது.  தற்போது லிவ்விடேட்டர் பயன்பாட்டினால் 10 இல் 6 குழந்தைகளுக்கு மூச்சடைப்பு   (வீசிங்) போன்ற கொடிய சுவாச நோய்கள் வருகிறது என்று அறிவியல் ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சிராக்கை பயன்படுத்தி வேப்பிலை புகை போடுவதால் சுவாசக் கோளாறு மற்றும் கொசுத் தொல்லையிலிருந்து விடுதலைக் கிடைக்கும். இவரின் மற்றும் ஒரு தயாரிப்பு மூலிகை சாம்பிராணி, இந்த மூலிகை சாம்பிராணி புகை போடுவதால், அது காற்றில் கலந்து உள்ள கொடிய நச்சுக்களை முறியடித்து இயற்கை நறுமணத்தை தருகிறது, பிளாஸ்டிக் மற்றும் வேறு எந்த வேதிப் பொருளும் பயன்படுத்தாமல் வடிவமைக்கப்பட்டுள்ளதால் சிராக் இயற்கைக்கு உகந்த இயந்திரம் எனலாம்.

சிராக்கிற்கான காப்புரிமையை  அதன் கண்டுபிடிப்பாளரான பொறியாளர் கார்த்திக்குமார் பெற்று சிராக்-ஐ தற்போது சந்தையில் அறிமுக படுத்தியுள்ளார்.
அறிவியலும் ஆன்மீகமும் ஒன்றிணைந்த இந்திய வாழ்க்கை முறையில் சிராக் மற்றும் மூலிகை சாம்பிராணியின் பயன்பாட்டினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் மனித ஆரோக்கியமும் மேன்மைப்படும் என நம்பலாம். 

இந்த நவீன சாம்பிராணி மெஷின் பற்றி மேலும் தெரிந்து கொள்ள 9962087220, 044 26562756 எனும் எண்களைத் தொடர்பு கொள்ளலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com