மிஸ் யூனிவர்ஸ் 2017 அழகிகளின் நாட்டுப்பற்று!

அழகிப் போட்டியில் பங்கேற்றுள்ள ஒவ்வொரு பெண்ணுமே தனது பெயரை விட தனது நாட்டின் பெயரை மிக அழுத்தமாக உச்சரிப்பது பார்ப்பதற்கும், கேட்பதற்கும் இனிமையாக
மிஸ் யூனிவர்ஸ் 2017 அழகிகளின் நாட்டுப்பற்று!
Published on
Updated on
1 min read

நீங்கள் அழகிப் போட்டிகளுக்கு ஆதரவளிப்பவர்களாகவோ, எதிர்ப்பவர்களாகவோ இருக்கலாம். அது அவரவர் மனநிலை, மற்றும் விருப்பு, வெறுப்புகள் சார்ந்தது. ஆனால் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் இந்த காணொலியைக் கானும் போது உங்களுக்கும் இந்த அழகிகளையும், அழகிப் போட்டியையும் கூட ஒருவேளை பிடித்துப் போகலாம். இது இந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்ற பிரபஞ்ச அழகிப்போட்டி 2017 ன் முதன்மைச் சுற்று. இதில் அழகிகள் தங்களை அறிமுகப் படுத்திக் கொள்ளும் போதும், தங்களது நாட்டை அறிமுகப் படுத்திக் கொள்ளும் போதும் உரத்து ஒலிக்கும் அவர்களது குரல்களில் வழியும் பெருமிதத்தைக் காணுங்கள். நாட்டுப்பற்றை இப்படியும் பொங்கி வழியச் செய்யலாம் என்று கண்டறிந்த விளம்பரதாரர்களை, அழகிகளுக்கு பேசும் முறை, ஒய்யாரமாக நடக்கும் முறைகளை எல்லாம் கற்றுத் தந்த நடன அமைப்பாளரான ஸ்டெஃபனி கம்மர் எனும் பெண்மணியைப் பாராட்டியே ஆக வேண்டும்.

அழகிப் போட்டி என்பதே ஒரு பன்னாட்டு வியாபார தந்திரம் தான் என்றாலும் சினிமாக்களைப் போல, இசை நிகழ்ச்சிகளைப் போல, விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளைப் போல இதிலும் மக்களின் நாடு சார்ந்த பற்றுதல்களைத் தூண்டக் கூடிய காரணிகளை தந்திரமாகவேனும் கையாள்கிறார்கள். எல்லா அழகிகளும் அவரவர் சார்ந்த நாடுகளைப் பொறுத்து ஹாலிவுட்டிலோ, பாலிவுட்டிலோ அல்லது ஹோலிவுட்டிலோ ஒரு தரமேனும் தடம் பதிக்காமல் போய் விட மாட்டார்கள். எல்லா நதிகளும் கடலில் சங்கமிப்பதைப் போலவே குறைந்த பட்சம் சர்வ தேச விளம்பரப் படங்களிலாவது தலை காட்டுவார்கள். இம்முறை பிரபஞ்ச அழகியாகத் தேர்வாகியுள்ள ஃபிரான்ஸ் தேசத்து அழகி ஐரிஷ் மெட்டினரா ஒரு பல் மருத்துவ மாணவியாம். அவராவது கலைச்சேவையிலிருந்து தப்பித்து உலகப் புகழ் பெற்ற பல் மருத்துவராகி சாதிப்பாரா! என்பதை வருங்காலங்களில் காணலாம்.

அழகிகளின் நாட்டுப்பற்றைக் காண இந்த வீடியோ இணைப்பின் முதல் 15 நிமிடங்களில் வரக்கூடிய அறிமுகப் படலத்தைக் காணுங்கள்.

அழகிப் போட்டியில் பங்கேற்றுள்ள ஒவ்வொரு பெண்ணுமே தனது பெயரை விட தனது நாட்டின் பெயரை மிக அழுத்தமாக உச்சரிப்பது பார்ப்பதற்கும், கேட்பதற்கும் இனிமையாகவே இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com