தலை முடி உதிர்கிறதா? ஸ்மார்ட் கோம்ப் பயன்படுத்துங்க பிரச்சினை தீரும்! 

இந்த வகை சீப்புகளை அழகு சாதனப் பொருட்களுக்கான சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது பிரபல லோரியல் நிறுவனம். 
தலை முடி உதிர்கிறதா? ஸ்மார்ட் கோம்ப் பயன்படுத்துங்க பிரச்சினை தீரும்! 
Updated on
1 min read

தலைமுடி உதிர்கிறதே என்ற கவலையா? எத்தனை ஷாம்பூ மாற்றினாலும், குளிக்கும் தண்ணீரை மாற்றினாலும் முடி உதிர்தலுக்கு தீர்வே கிடைக்காமல் சோர்ந்து விட்டீர்களா? கவலை வேண்டாம் உங்களுக்காகவே சந்தையில் புது விதமாக ‘ஸ்மார்ட் கோம்ப்’ எனப்படும் தலை வாறும் சீப்புகள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன. இந்த சீப்பில் பொறுத்தப்பட்டுள்ள மைக்ரோ ஃபோனால் தலை வாறும் போது நமது தலைமுடியின் ஆரோக்கிய குறைபாடுகள் அறியப்படுமாம். முடி உதிர்தல், பொடுகு, தலை முடி உடைதல், உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பின் கண்டறியப்பட்டு அதற்குத் தேவையான சிகிச்சைகள் மேற்கொள்ள உதவுமாம். இவ்வைகையான சீப்புகள் விரைவில் இந்திய மார்கெட்டுகளிலும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. இணையம் மூலமாகவும் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ள வசதி உண்டாம்.

இந்த வகை சீப்புகளை அழகு சாதனப் பொருட்களுக்கான சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது பிரபல லோரியல் நிறுவனம். 

இந்த ஸ்மார்ட் கோம்ப் வகை சீப்புகளில் பொருத்தப்பட்டுள்ள மைக்ரோ ஃபோன்களை நோக்கியா ஃபோன் அப்ளிகேஷன்கள் மூலம் இயக்கலாம். இந்த மொபைல் ஆப்கள் தலைமுடியின் பிரச்சினைகள, ஆரோக்கியக் குறைபாடுகள் உள்ளிட்டவற்றை பதிவு செய்து கொள்ளும். நாம் தேவையான போது அவற்றை சோதித்துக் கொள்ள முடியுமாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com