சம்மர்ல என்ன செய்யலாம்? என்ன செய்யக் கூடாது?

அடர் நிறங்கள் சூரியக் கதிர்களை அப்படியே உள்வாங்கி சூட்டைக் கிளப்பும். வெளிறிய நிறங்களே சூரிய வெப்பத்தை உள்வாங்காமல் பிரதிபலிக்கும். எனவே வெயிலுக்கு வெளிறிய நிறங்களே ஏற்றவை.
சம்மர்ல என்ன செய்யலாம்? என்ன செய்யக் கூடாது?
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் இந்த வருடம் உக்கிரமான வெயில் இல்லை என்று வானிலை அறிக்கைகள் கூறி வந்தாலும், வெயிலுக்கே உண்டான சில பாதக அம்சங்கள் எப்போதும் இருக்கும். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் எடுத்துத் தான் தீர வேண்டும். வெயில் காலங்களில் கண்டிப்பாக நாம் செய்யவே கூடாதவை என சிலவும், செய்தே தீர வேண்டியவை எனச் சிலவும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் பற்றி பார்ப்போமா?

செய்ய வேண்டியவை:

  • வெயில் காலங்களில் உணவுப் பொருட்கள் சீக்கிரம் கெட்டு விடும். அதனால் பெரும்பாலும் கடையில் வாங்கும் உணவு வகைகளைத் தவிர்த்து விட்டு, வீட்டில் சமைத்த உணவுகளை சாப்பிட்டால் உணவினால் உண்டாகக் கூடிய உடல் உபாதைகளைத் தவிர்க்கலாம்.
  • ஃப்ரெஷ்ஷான அதே சமயம் அதிக நீர்ச்சத்துடைய பழங்களையும், காய்கறிகளையும் அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • எப்போதும் அவரவர் உடல் எடைக்குத் தக்கவாறு போதுமான அளவு தண்ணீர் அருந்த மறக்காதீர்கள், எங்கே செல்வதாக இருந்தாலும் கையோடு வாட்டர் பாட்டில் எடுத்துச் செல்ல மறக்காதீர்கள்.
  • சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதைப் போலவே வெயில் காலமென்றால் ஒரு நாளில் இரண்டு தரம் குளிக்க மறந்து விட வேண்டாம். உடலைச் சுத்தமாக வைத்துக் கொள்வது என்பது, சத்தான உணவைத் தேர்ந்தெடுத்து உண்பதற்குச் சமம்.
  • வெயில் காலத்தில் கூடுமான வரை வெளிறிய நிறங்களில் உள்ள தளர்வான காட்டன் மற்றும் லினன் ஆடைகளைப் பயன்படுத்துங்கள். ஏனெனில், அடர் நிறங்கள் சூரியக் கதிர்களை அப்படியே உள்வாங்கி சூட்டைக் கிளப்பும். வெளிறிய நிறங்களே சூரிய வெப்பத்தை உள்வாங்காமல் பிரதிபலிக்கும். எனவே வெயிலுக்கு வெளிறிய நிறங்களே ஏற்றவை.

செய்யக் கூடாதவை:

  • வெயிலில் தாகமெடுக்கிறதே என்று, மறந்தும் அசுத்தமான குடிநீரை குடித்து விடாதீர்கள். அதே போல சாலையோரங்களில் சுகாதாரமற்று சமைக்கப் படும் உணவுகளையும் வாங்கிச் சாப்பிடக் கூடாது.
  • மதிய வெயிலில் வெளியில் செல்ல வேண்டியதாக இருந்தால் குடை பயன்படுத்துங்கள், வெயிலின் தாக்கம் அதிகமுள்ள மதிய நேரங்களில், நேரடியாக வெப்பம் உச்சந்தலையில் இறங்கும்படியாக வெளியில் அதிக நேரம் நடமாடக் கூடாது.
  • வெயில் காலங்களில் ஃபுட் பாய்ஸனிங் ஏற்படக் கூடிய சாத்தியங்கள் அதிகம், எனவே வீடுகளில் எஞ்சிய உணவுகளை, மறுநாள் உண்ணும் வழக்கத்துக்கு தடா போட்டு விடுங்கள்.
  • இனிப்பான குளிர் பானங்கள் தாகத்தை அதிகரிக்கக் கூடியவை. எனவே அவற்றைத் தவிர்த்து விட்டு பதிலாக அடிக்கடி தண்ணீர் குடிக்கலாம். அதே போல சத்தான சாலட்டுகளை அதிகம் எடுத்துக் கொண்டு ஃபாஸ்ட் ஃபுட் வகையறாக்களை ஓரம் கட்ட வேண்டும்.
  • ஆல்கஹால் நீரிழப்புக்கு காரணமாகும். எனவே குடிப்பழக்கம் இருப்பவர்கள் வெயில் காலங்களில் லிமிட்டாக குடிப்பதும் அல்லது குடிக்காமலே இருப்பதும் உத்தமம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com