அமேஸான் இந்தியாவின் புதிய விளம்பரம்!

2016 அமேஸான் இந்தியா ஒரு புதிய விளம்பர பிரச்சாரத்தை மேற்கொண்டது. அது #MomBeAGirlAgain என்பதாகும்.
அமேஸான் இந்தியாவின் புதிய விளம்பரம்!

2016 அமேஸான் இந்தியா ஒரு புதிய விளம்பர பிரச்சாரத்தை மேற்கொண்டது. அது #MomBeAGirlAgain என்பதாகும். சமீபத்தில் அதன் தொடர்ச்சியாக மற்றொரு விளம்பர படத்தை அமேஸான் வெளியிட்டுள்ளது. இதில் அம்மாவிடம் இருக்கும் திறமைகளை மகள் உணருவதாக குறுங்க(வி)தை போல சொல்கிறார்கள்.

ஸ்ரேயா ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் டீன் ஏஜ் பெண். அவளுடைய பி.டி டீச்சர் டுஃபானி என்ற பழைய மாணவியைப் பற்றி பெருமையாகச் சொல்கிறார். டுஃபானி பள்ளியின் செல்லப் பெண்ணாக இருந்தவர் என்றும், ஃபுட் பால் சாம்பியன் என்றும் விளக்கமாகக் கூறி, டுஃபானி வாங்கிய மெடல்களையும் அவளைப் பற்றி செய்தித்தாள்களில் வந்த செய்திகளைக் காண்பிக்க, அந்தப் புகைப்படங்களைப் பார்த்த ஸ்ரேயாவுக்கு இன்ப அதிர்ச்சி. டுஃபானி வேறு யாருமல்ல அவளுடைய அம்மாதான். பள்ளியின் ஹீரோயினாக இருந்த தன் அம்மா தன் திறமைகளை குடும்பத்துக்காக விட்டுக் கொடுத்துள்ளாள் என்பதைத் தெரிந்து கொள்கிறாள் ஸ்ரேயா. 

தன்னுடைய பிறந்த நாளுக்காக அம்மா வருகிறாளா என்று அப்பாவுக்கு ஃபோன் செய்து கேட்கிறாள். அவர் நிச்சயம் அம்மா வருவாள் என்றதும் மகிழ்ச்சியடைகிறாள். ஆர்வத்துடன் அம்மாவுக்காகக் காத்திருக்கிறாள் ஸ்ரேயா. டீச்சரின் உதவியுடன் அமேஸான் இந்தியா இணையத்தளத்தில் தேடிப்பிடிட்த்து ஆசை ஆசையாக ஒரு பரிசைத் தேர்ந்தெடுக்கிறாள்.

அம்மா மகளின் பிறந்த நாளை கொண்டாட கேக்குடன் ஹாஸ்டலுக்கு வர, மகள் அம்மாவை கட்டி அணைத்து அவளும் ஒரு கிஃப்ட் தருகிறாள். அது ஒரு ஃபுட் பால். கண்கள் விரிய அம்மா அவளைப் பார்க்க இது டுஃபானிக்காக என்கிறாள். பின்னாலிருந்து வரும் டீச்சர் அவளை பெயர் சொல்லி அழைக்க டீச்சரைக் கட்டிப் பிடித்து நெகிழ்ந்து போகிறாள் அம்மா. 


இறுதிக் காட்சியில் மழை பொழிகிறது. அதில் இருவர் சந்தோஷமாக ஃபுட் பால் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் டுஃபானியும் ஸ்ரேயாவும்.

#MomBeAGirlAgain என்ற இந்த தொடர் விளம்பரங்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துவிட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com