உங்கள் வீட்டு ஃபிரிட்ஜில் இதையெல்லாம் வைக்காதீங்க!

வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு இவற்றை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது. வாழைப் பழங்களை ஃபிரிட்ஜில் வைத்தால் கறுத்துவிடும்.
உங்கள் வீட்டு ஃபிரிட்ஜில் இதையெல்லாம் வைக்காதீங்க!

வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு இவற்றை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது. வாழைப் பழங்களை ஃபிரிட்ஜில் வைத்தால் கறுத்துவிடும். காய்கறிகளை கழுவாமல் ஃபிரிட்ஜில்  வைக்கக் கூடாது. ஊறுகாய் வகைகளை ஃபிரிட்ஜுக்குள் வைக்கக் கூடாது. இவைத் தவிர தேன், பழங்கள், தக்காளி சாஸ், இறைச்சி, பிரெட், போன்றவற்றை ஃபிரிட்ஜில் வைக்க வேண்டாம். சூடான பொருட்களை ஒருபோதும் ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது. எந்தப் பொருளாக இருந்தாலும் பாலிதீன் கவர்களில் போட்டு வைத்தால்  ஒரு பொருளின் வாசனை மற்ற பொருளுக்குப் பரவாது.

-  ஆர்.மீனாட்சி

டிப்ஸ் ...டிப்ஸ்... டிப்ஸ் ...

பூண்டு விரைவாக உரிக்க வேண்டுமென்றால் எல்லா பூண்டுகளையும் மைக்ரோவேவ் அவனில் 15 விநாடி வையுங்கள் தோல் எளிதாக, மிகவும் சீக்கிரமாக உதிர்ந்துவிடும்.

உப்புமா, வெண்பொங்கல் இறுகிவிட்டால் அரைக் கரண்டி சூடான பாலை ஊற்றிக்கிளறினால் இளகிவிடும்.  சுவையும் மாறாது. கேசரிக்கும் இதே போன்று செய்யலாம்.

ஒரு தக்காளி, ஒரு வெங்காயம், இஞ்சி, இரண்டு பச்சைமிளகாய் அரை ஸ்பூன் கடுகு தாளித்து பச்சை வாசனை போகும்வரை வதக்கி எடுத்தால் சுவையான மசாலா தொக்கு தயார்.

தயிர் கெட்டியாக  இருக்க பாலில் தண்ணீர் சேர்க்காமல் பொங்கப்பொங்க காய்ச்சி இறக்கி வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் போதே அதிகம் புளிக்காத தயிர் ஒரு மேசைக்கரண்டி விட்டுக் கலக்குங்கள். பிறகு அதை மூடிவைத்துவிட்டு, மறுநாள் காலையில் பார்த்தால், மேசைக்கரண்டியால் வெட்டியெடுக்கும் அளவுக்கு அதி கெட்டித்தயிராக உறைந்திருக்கும். 

- எச்.சீதாலட்சுமி

சுடு சோற்றில் வெந்தயத் தூள், கறிவேப்பிலைப் பொடி கலந்து முதல்  உருண்டையைப் பிசைந்து சாப்பிட்டு வந்தால்  இரத்தக் கொதிப்பு குணமாகும். 

பாகற்காய், வாழைப்பூ, பீன்ஸ், முள்ளங்கி, வாழைத்தண்டு, கோஸ் ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்த்து வர நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.

இலுப்பை எண்ணெய்யில் மஞ்சள் தூள் கலந்து கால் வெடிப்பில் தடவி வர விரைவில் குணமாகும். 

எலுமிச்சைச் சாறுடன் தேன் கலந்து தினமும் அருந்தி வர உடல் எடை குறைவதுடன், வயிறும் சுத்தமாகும். 

கஸ்தூரி மஞ்சளில் எலுமிச்சைப்பழச்சாறு கலந்து தினமும்  தடவி வர, முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறையும்.

வல்லாரையை  அடிக்கடி உணவில் சேர்த்து வர இரத்த சோகை நீங்கும்.

பல்  வலி, ஈறு  வீக்கம் இருந்தால் 5 மிளகும், 2 கிராம்பையும் பொடித்து பல் வலி உள்ள இடத்தில் தடவினால், வலி குறையும்.  அதுபோன்று,  ஒரு டம்ளர் சூடான நீரில் இரண்டு தேக்கரண்டி  எலுமிச்சைச் சாறு கலந்து வாய்க் கொப்பளித்தால், வாயில் நோய்  தொற்று உண்டாக்கும்    பாக்டீரியா  அழியும். 

- சரோஜா சண்முகம்

கிரைண்டரில் இட்லி மாவு அரைக்கும் போது அரிசி மாவு சிக்காமல் இருக்க, ஒரு பிடி உளுந்தை  சேர்த்து அரைத்தால்  மாவு அரைக்க சுலபமாக இருக்கும். மாவும் வெண்ணெய்ப்போல் சீக்கிரம் மசிந்துவிடும்.

கோதுமை மாவு அரைக்கும்போது ஒரு கிலோ  கோதுமைக்கு ஒரு கைப்பிடி அளவு கொண்டைக் கடலையைப் போட்டு அரைத்தால் சுவை கூடுதலாக இருக்கும். உடலுக்கும் சத்து நிறைந்தது.

சாதம் குழைந்து விட்டால் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து, பிறகு சாதத்தை வடித்தால் சாதம் பூப்போல இருக்கும்.

வெந்தயக் குழம்பை இறக்கும் சமயத்தில் ஒரு தேக்கரண்டி எள்ளுப் போடியைப் போட்டால் குழம்பு மிகவும் வாசனையுடன் இருக்கும்.

-  எம்.ஏ.நிவேதா 

வெந்தயத்தை வேகவைத்து தேன் விட்டுக் கடைந்து உட்கொள்ள மார்பு வலி குணமாகும்.

எலுமிச்சை சாறை  தலையில் தடவி பிறகு ஷாம்பூ போட்டுக் குளித்தால்  தலைமுடி  புசுபுசுவென்று அழகாக இருக்கும்.

கஸ்தூரி மஞ்சளுடன் சிறிது தயிர் கலந்து நன்கு உடலில் தடவி அது உலர்ந்த பின் குளித்தால் மேனி அழகு பெறும்.

ஆரஞ்சு சாற்றை முகத்தில் பூசி பத்து நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பளபளக்கும்.

உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டி கரும்புள்ளிகள் மீது தடவி வர, அவை மறையும். 

இளநீரில் சிறிது மஞ்சள் தூளைக் கலந்து முகத்தில் தடவினால் முகப்பரு மறையும்.

மோரைப் பஞ்சில் தோய்த்து முகம்,  கழுத்தில் தேய்த்து வந்தால் எண்ணெய் பசையுள்ள தோல் பளபளப்பாகும்.

பீட்ரூட்டை வெட்டி அதன்சாற்றை உதடுகளில் தேய்த்துவர உதடுகள் சிவப்பாக மாறிவிடும்.

வெள்ளரிச் சாறுடன், ஆப்பிள் சாறையும் சம அளவில் கலந்து முகத்தில் தடவி வர ஒவ்வாமையால் முகத்தில் ஏற்படும் அலர்ஜி நீங்கிவிடும்.

வாரம் இருமுறை எலுமிச்சைச் சாறில் உப்பு கலந்து பல் தேய்த்து வந்தால் பற்களிலுள்ள கறை அகலும்.

(‘பெண்களுக்கான அழகுக் குறிப்புகள்' நூலிலிருந்து -  நெ.இராமன்)

வாரத்தில் இரண்டு நாள் வேப்பம் பூ ரசம்  செய்து உண்டு வர  வயிறு  உப்புசம், வாயுத் தொல்லை நீங்கும்.  அஜீரணக் கோளாறும் குணமாகும்.

கேரட் சாறில் தேனும் காய்ச்சிய பாலும், கலந்து குடித்து வர நினைவாற்றல் பெருகும்.

ஒரு தேக்கரண்டி துளசிச்சாறு, 1 சிட்டிகை மிளகுத்தூள், அரை தேக்கரண்டி தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வர இருமல், மூச்சு வாங்குதல் 
குணமாகும்.

இரவில் தூங்கச் செல்வதற்கு முன் மூக்கில் இரு சொட்டு கிராம்பு தைலம் விட்டால் குறட்டை ஒலி கட்டுப்படும்.  

துளசி இலையை அரைத்து தேமலின் மீது பூசி வர, விரைவில் தேமல் குணமாகும்.

குழந்தைகளுக்கு சளித் தொல்லை அதிகமாகி மூச்சுவிட சிரமப்பட்டால், இரவில்  படுக்கும் முன் 1 கரண்டி தேங்காய் எண்ணெய்யைச் சூடாக்கி, அதில் ஒரு சிறிய துண்டு பூங்கற்பூரத்தை சேர்த்து இறக்கி அதில் வரும் புகையை குழந்தைகளை முகர சொல்லவும்.  பின்னர்,  தேங்காய் எண்ணெய்யை சூடு பொறுக்குமளவு எடுத்து மார்பு,  உள்ளங்கை, உள்ளங்காலில் நன்கு தேய்த்துவிட்டால்  மூச்சு திணறல் உடனடியாக கட்டுப்படும். சளித் தொல்லையும் குறையும்.

துளசி இலையுடன் இளம் மஞ்சள் கிழங்கை வைத்து அரைத்து அந்த விழுதை நல்லெண்ணெய்யில் வதக்கி பருக்களின் மீது வைத்து கட்டி வர விரைவில் பருக்கள் மறையும். 

வாரத்தில் ஒரு நாள் முருங்கைக்கீரை சூப் செய்து உண்டு வர பார்வை கோளாறுகள் நீங்கும்.

- என். சண்முகம்

நெல்லிக்காயை இடித்து சாறு பிழிந்து தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் தொடர் விக்கல் நிற்கும்.

செம்பருத்தி இலைகளை காய வைத்து தூள் செய்து, தினமும் இருவேளை உண்டு வர மலச்சிக்கல் தீரும்.

வேப்பம்பூவை உலர்த்தி தூளாக்கி வெந்நீரில் கலந்து உட்கொண்டு வந்தால் வாயுத்தொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப் பூண் ஆறிவிடும்.

வெந்தயத்தைப் பொடி செய்து மோரில் குடித்துவர வயிற்றுவலி நீங்கிவிடும்.

ஒரு டம்ளர் தண்ணீரில் கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் கொதிக்க வைத்து ஆற வைத்து  வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். 

- கீதா ஹரிஹரன்

மாவு சலிக்கும் சல்லடை ஓட்டையாகிவிட்டால் அந்த இடத்தில் உட்புறமாக சற்று பெரிய சைஸில் உள்ள ஸ்டிக்கர் பொட்டை ஒட்டிவிட்டால் ஓட்டை அடைபட்டுவிடும். மீண்டும் பயன்படுத்தலாம்.

தீய்ந்து அடிப்பகுதியில் கரிபடிந்த வாணலியை சுத்தம் செய்ய வேண்டுமா?  ஒரு வெங்காயத்தை நறுக்கி வாணலியில் இட்டு உப்பையும் தண்ணீரையும் அதனோடு சேர்த்து கொதிக்க வையுங்கள் இறக்கி ஆறிய பிறகு கழுவினால் பாத்திரம் பளபளக்கும்.

புதிய பிளாஸ்டிக் பாத்திரங்களைக் கழுவும்போது  சிறிது உப்பு நீர்  சேர்த்துக் கழுவினால் பிளாஸ்டிக் வாடை போய்விடும்.

வெள்ளி பாத்திரத்தை தேய்க்கும் போது கடுகை அரைத்துத் தேய்த்தால் பாத்திரம் பளபளவென்று இருக்கும். வெள்ளியில் உள்ள கறையும் 
போய்விடும்.

அலுமினிய பாத்திரத்தின் உட்பகுதியில் கறுப்பு நிறமாக  இருந்தால் ஒரு தக்காளியை வெட்டிப் போட்டு வேக வையுங்கள் கறுப்பு நிறம் மாறிவிடும்.

பித்தளை பாத்திரங்களைத்  தேய்க்கும்போது கொஞ்சம் எலுமிச்சை பழத்தோலுடன் சோடா மாவையும்  சேர்த்துத் துலக்கினால் புதிதாகத் தோன்றும்.

எலுமிச்சைப் பழத்தை பிழிந்துவிட்டு தோலை வெளியே  எறியாமல் எண்ணெய் பிசுக்கு பாத்திரங்களை கழுவினால் சுத்தமாக  இருக்கும்.

- ஆர்.ஜெயலட்சுமி

தூபக்கால், தீபக்கால் போன்ற பூஜை சாமான்களில் சாம்பிராணி மற்றும் கற்பூரம் ஏற்றி கரி படிந்துள்ளதா? தூபக்காலை அடுப்பில் காட்டி சுடேற்றுங்கள். சூடானதும் மேசைக்கரண்டியால் அல்லது கத்தியால் சுரண்டினால் கரியெல்லாம் உதிர்ந்துவிடும்.

ஈரம்பட்டு நமத்துப்போன அப்பளத்தை உளுத்தம் பருப்பின் மேல் வைத்து மூடிவிட்டால் அப்பளம் வெயிலில் உலர்த்தி எடுத்தது போலாகிவிடும்.

- சி.பன்னீர்செல்வம்

தினசரி சிறுதுண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டு வந்தால் கல்லீரல்  ஆரோக்கியமாக இருக்கும்.

- கே. பிரபாவதி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com