மெகாத் தொடர்களில் உங்களுக்குப் பிடித்த ஸ்ரீகிருஷ்ணர் யார்?

மெகாத் தொடர்களில் உங்களுக்குப் பிடித்த ஸ்ரீகிருஷ்ணர் யார்?

90 களில் பி.ஆர் சோப்ராவின் தூர்தர்ஷன் மகாபாரதத்தில் ஸ்ரீ கிருஷ்ணரைப் பார்த்திருக்கிறீர்களா? இன்று வரை ஸ்ரீ கிருஷ்ணர் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்தவர் அவர் ஒருவராகவே இருக்கக் கூடும்.

90 களில் பி.ஆர் சோப்ராவின் தூர்தர்ஷன் மகாபாரதத்தில் ஸ்ரீ கிருஷ்ணரைப் பார்த்திருக்கிறீர்களா? இன்று வரை ஸ்ரீ கிருஷ்ணர் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்தவர் அவர் ஒருவராகவே இருக்கக் கூடும். அதற்குப் பின்னான காலகட்டத்தில் மகாபாரதத்தில் இந்தியிலும் சரி தமிழிலும் சரி பல வெர்ஷன்கள் வந்து விட்டன. ஒவ்வொன்றிலும் வேறு வேறு நபர்கள் ஸ்ரீ கிருஷ்ணராக நடித்தார்கள். ஆனால் ஒருவரும் பழைய தூர்தர்ஷன் கிருஷ்ணர் அளவுக்கு மனதை ஈர்க்கவில்லை. இப்போது ‘சூர்ய புத்திரன் கர்ணன்’ என்ற பெயரில் மெகாத் தொடர் ஒன்று ஜீ தொலைக்காட்சியிலோ, பாலிமரிலோ வந்து கொண்டிருக்கிறது. தவிர  ‘ஜெய் ஹனுமன்’ என்றொரு தொடர் ஞாயிறு தோறும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இவை இரண்டிலுமே கிருஷ்ணர் இருக்கிறார் அவ்வளவே. ஆனால் அவர்கள் மக்களின் மனம் கவர்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாக்கள் இல்லை என்பது வாஸ்தவம். பழைய கிருஷ்ணரையும், புது கிருஷ்ணர்களையும் ஏன் ஒப்பிட வேண்டும் என்று கேட்கலாம்... கீழே உள்ள புகைப்படங்களைக் கண்டால் உங்களுக்கே புரியும்!

சோப்ராவின் ஸ்ரீ கிருஷ்ணர்...

பாட்டிகள் சொல்லிச் சென்ற கதைகளின் படி ஸ்ரீ கிருஷ்ணர் என்பவர் புன்னகை மாறாமல் பொலியும் முகம் கொண்டவர். சுருள் சுருளான கேசம் காற்றிலாட மயிற் பீலி குழல் சூடி கரிய நெடிய தோற்றம் கொண்டு காண்போரை வசீகரிக்கும் குறும்பான புன்னகைக்குச் சொந்தக்காரர். கிருஷ்ணராக நடிக்கையில் தாம் ஒரு மனித ஜீவன் என்பதையே மறந்து போய் தெய்வாம்ச நிலையை எய்தி அந்தக் கதாபாத்திரத்தில் மூழ்கி ரசிகர்களுக்கு குறிப்பாக பள்ளிச் சிறுவர், சிறுமிகளுக்கு நிஜ ஸ்ரீ கிருஷ்ணரை நேரில் கண்ட உணர்வை எழுப்பக் கூடியவர். சுருங்கச் சொன்னால் நாடகத் தன்மை இல்லாது இயல்பான கரிய நிறம், குறும்பு கொப்பளிக்கும் புன்னகை. கண்களில் குன்றாத ஜீவனொளி இவை இருந்தால் போதும் ஸ்ரீ கிருஷ்ணரை உயிர் பெற்று எழ வைக்கலாம் என்பது இன்றைய மெகாத் தொடர் இயக்குனர்களுக்குத் தெரியாது போலும்.

சில தொடர்களில் வரும் ஸ்ரீ கிருஷ்ணர்களைக் கண்டால் போலி கிருஷ்ண பரமாத்மாக்கள் போலிருக்கிறார்கள். 

ஆந்திராவைப் பொறுத்தவரை அவர்களுக்கு கிருஷ்ணர் என்றாலே என்றென்றும் என்.டி.ஆர் மட்டும் தான் போலும்! தென்னிந்தியாவில் கிருஷ்ணர் வேடம் ஏற்றவர்களில் அந்நாட்களில் இளைமையான என்.டி.ஆர் வெகு அருமையாகப் பொருந்தி நின்றார். என்.டி.ஆர் ஐ இப்போதும் அவரது அபிமானிகளும், ரசிக கோடிகளும் ‘தேவுடு’ என்றே பிரஸ்தாபிக்கிறார்கள் என்பது நிஜம். வார இதழ் ஒன்றில் வாசித்தேன். ஆந்திராவிலும், தமிழகத்தின் தென் மூலையிலுமிருந்து திருப்பதிக்கு வரும் பக்த மகா ஜனங்கள் திருப்பதி ஏழுமலையானைத் தரிசித்த கையோடு அப்போது தி.நகரில் இருந்த என்.டி.ஆர் வீட்டிற்குப் போய் அவரையும் தரிசித்து விட்டுத் தான் ஊர் திரும்புவார்களாம். இல்லா விட்டால் தங்களது பக்தி யாத்திரை நிறைவு பெறாது என்று எண்ணுவார்களோ என்னவோ?! ஆனால் இப்படி ஒரு பழக்கம் அப்போதைய ஏழுமலையானின் பக்தர்களிடையே இருந்தது என்பது நிஜம். ஒரு நடிகரைத் தெய்மாகக் கொண்டாட வைத்த கடவுள் ரூபம் ஸ்ரீகிருஷ்ணரே! இன்றளவும் தென்னகத்தில் என்.டி.ஆர் ஸ்ரீகிருஷ்ணர் என்றால் வடக்கிலிருந்து ஒளிபரப்பான பி.ஆர் சோப்ரா மகாபாரதத்தில் இந்தியா முழுமையும் ஏற்றுக் கொண்ட ஒரே ஸ்ரீகிருஷ்ணர் நிதிஷ் பரத்வாஜ் என்றால் அது மிகையில்லை.

இதோ இவர் அடுத்த ஸ்ரீ கிருஷ்ணர், புதிதாக தயாரிப்பில் இருக்கும் கிருஷ்ணா சீரிஸ் நெடுந்தொடர் ஒன்றில் இவர் தான் கிருஷ்ணராக நடிக்கப் போகிறாரா. உங்கள் மனதில் இருக்கும் கிருஷ்ணன் இவரோடு ஒத்துப்போகிறானா என்று எதற்கும் ஒரு முறை சோதித்துப் பார்த்துக்கொள்ளுங்கள்.

யார் கிருஷ்ணராக நடித்தாலும் பதின் வயதுகளில் நம் மனதில் பதிந்து போன வேடங்களை, கதாபத்திரங்களை மறக்கடிக்க முடியாது என்பதற்கு இந்த விசயத்தையும் ஒரு உதாரணமாகக் கொள்ளலாம். சோப்ராவின் மகாபாரதத்தில் அறிமுகமாகும் போது நிதிஷ் பரத்வாஜுக்கு வயது 23 மட்டுமே. ஒரே இரவில் இன்றைய  பாகுபலி பிரபாஸ் போல  அந்நாளைய ‘பான் இந்தியா’ பிரபலமானார் இவர். மகாபாரத கிருஷ்ணராகவே மக்கள் மனதைக் கொள்ளை கொண்டு பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்தியப் பிரதேசத்தின் ஜாம்ஷெட்பூர் கேண்டிடேட் ஆக தேர்தலில் நின்று நான்கு வருடங்கள் எம். பி யாகவும் இருந்தார் அவர். அடிப்படையில் கால்நடை மருத்துவரான இவருக்கு அதில் நாட்டம் செல்லாததால் தற்போது மராத்தியில் திரைப்பட இயக்குனர் மற்றும் ஸ்க்ரிப்ட் ரைட்டராகச் செயல்பட்டு வருகிறார் என்பது செய்தி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com