நமுத்துப் போன பிஸ்கெட்டுகளை என்ன செய்யலாம்?

வீட்டில் தயாரித்த உணவுகள் சில சமயம் மீந்து போகும்.
நமுத்துப் போன பிஸ்கெட்டுகளை என்ன செய்யலாம்?

வீட்டில் தயாரித்த உணவுகள் சில சமயம் மீந்து போகும். அவற்றைத் தூற எறியவும் மனம் வராது, அப்படியே பயன்படுத்தவும் முடியாது. அத்தகைய உணவுகளை வேஸ்ட் ஆக்காமல் டேஸ்டியாக ஆக்க முடியும்.

பிரெட், பன் போன்றவை உலர்ந்து விட்டால் சிறிது தண்ணீரில் நனைத்து நன்றாகப் பிசையவும். அதில் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, வடை போல் பொரித்தால் பிரெட் வடை தயார்.

தர்பூசணியின் தோலை எண்ணெயில் வதக்கி உப்பு, மிளகாய், புளி, உளுத்தம் பருப்பு சேர்த்து அரைத்தால் அருமையான சைட் டிஷ் தயார்

மோர்க்குழம்பு மீதமாகி விட்டால் கடலைமாவைப் பிசைந்து உருட்டி எண்ணெயில் பொரித்து குழம்போடு சேர்த்து வடகறி போல் சாப்பிடலாம்

முட்டைக்கோஸ் பொரியல் மீந்துவிட்டால் அதனை வடை மாவுடன் சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

சாதம் மீந்துவிட்டால் அதை மிக்ஸியில் போட்டு சற்று தண்ணீர் தெளித்து அரைத்து எடுத்து கோதுமை மாவுடன் உப்பு, மிளகாய்ப்பொடி கலந்து பிசைந்து சப்பாத்திகளாகச் செய்யலாம். அல்லது அரைத்த சாதத்துடன் சிறிது கடலைமாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து பக்கோடா செய்யலாம்.

மீந்த ஊறுகாய்களை ஒன்று சேர்த்து மிக்ஸியில் அரைத்து சிறிது வெல்லம் சேர்த்து வாணலியில் போட்டுக் கிளறி ஜாம் போல தயாரிக்கலாம். இதைச் சப்பாத்தி, தோசை, இட்லி, பூரி போன்றவற்றுக்கு தொட்டுக் கொள்ளலாம்.

பொரித்த அப்பளம் மீந்துவிட்டால், அதை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி ஒரு கிண்ணம் தயிருடன் சேர்த்து உப்பு, பச்சை மிளகாய், இஞ்சியை அரைத்துச் சேர்த்தால் சுவையான பச்சடி தயார். இதை வெங்காயம், கேரட் துருவல், வெள்ளரிக்காய் துருவல் கலந்தும் தயாரிக்கலாம்.

தேங்காய் சட்னி மீதமாகிவிட்டால் புளித்த மோர், மஞ்சள் தூள் சேர்த்துக் கொதிக்க வைத்து பொரித்த அப்பளங்களை உடைத்துப் போட்டால் மோர்க் குழம்பு தயார்.

பண்டிகைக் காலங்களில் மைசூர்பாக், லட்டு, பர்பி செய்யும்போது விழும் துகள்களைச் சுண்டக் காய்ச்சிய பாலில் சேர்த்து பாயசமாகச் செய்யலாம்.

மோர்க்குழம்பு புளித்துவிட்டால் அதனை தோசை மாவுடன் கலந்து தோசையாக வார்த்தால் சுவையாக இருக்கும்.

நாவல்பழம் சாப்பிட்ட பின் அதன் கொட்டையை வெயிலில் காய வைத்துப் பொடித்து, தினமும் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வெந்நீர் குடித்தால் சர்க்கரை நோயைத் தடுக்கலாம்.

நமத்துப் போன பிஸ்கெட்டுகளை ஒன்றிரண்டாக பொடித்து பழங்களுடன் கலந்து ஃப்ரூட் - சாலட் செய்யலாம்.

- ஆர். கீதா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com