நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தீபாவளிக்கு நகை வாங்கப் போகிறீர்களா?!

இந்த தீபாவளிக்கு நகை வாங்கப் போகிறீர்களா? ஆமாம் என்றால்... என்ன டிசைனில் வாங்கப் போகிறீர்கள்? அட அதைப் பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாதா?

News image
Updated On :9 அக்டோபர் 2017, 11:04 am

ஹரிணி

தீபாவளி வந்து விட்டது...

அட்சய திருதியைக்கு மட்டுமல்ல, இப்போதெல்லாம் எல்லா விதமான விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களின் போதும் கூட மக்கள் நகைகள் வாங்க விரும்புகின்றனர். தங்கம், வெள்ளி, வைரம், வெள்ளைத்தங்கம், பிளாட்டினம் என சில உலோகங்கள் மட்டும் தான் எப்போதுமே இந்தியர்களான நமது ஏகதேச விருப்பங்களாக இருக்கின்றன. இந்த வகைகளிலும் கூட வைரம் என்பது கோடீஸ்வரர்கள் மற்றும் லட்சாதிபதிகளுக்கானவை என்றும் தங்க மட்டுமே சகலருக்குமானது என்றும் மக்களே தங்களுக்குள் தரம் பிரித்துக் கொண்டு விட்டார்கள். அதனால் தான் தங்கத்தின் விலை மட்டும் குறைவேனா என்கிறது. அதனால் தான் தங்கம் வாங்க தக்க தருணம் என்ற ஒன்றை இனம் பிரித்துப் பார்க்கவே முடியாமல் எல்லா நாளுமே திருநாட்களைப் போல தங்க நகைக்கடைகளில் கூட்டம் கும்மி நெரிகிறது. சரி இந்தத் தீபாவளிக்கு நீங்களும் கூட அந்தக் கூட்டத்தில் ஒருவராக இருக்க நேரலாம்... யாருக்குத் தெரியும்?! யார் எப்போது தங்கம் வாங்கப் போகிறார்கள் என?! முன்னைப்போல இல்லை, இப்போது நினைத்துக் கொண்டால் மக்கள் தங்கம் வாங்கக் கிளம்பி விடுகின்றனர்.

காரணம் தங்கம் எப்போதுமே மிகச் சிறந்த முதலீடு என மக்கள் நினைப்பதால்! 

சரி... இந்த தீபாவளிக்கு நகை வாங்கப் போகிறீர்களா? ஆமாம் என்றால்... என்ன டிசைனில் வாங்கப் போகிறீர்கள்? அட அதைப் பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாதா? அடடா என்ன சார் நீங்கள்? அதையெல்லாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டாமா என்ன? 

இதோ பார்த்தீர்களா? நகை வடிவமைப்பில் இந்த டிசைனின் பெயர் ஃபிலிகிரீ நகை டிசைன்...

Story image

அதாவது குட்டிக் குட்டியாக தங்க உருண்டைகளை, அல்லது தங்கக் கம்பிகளை நெருக்கமாக இணைத்து நமது விருப்பத்துக்குத் தகுந்த மாதிரியான டிசைன்களை உருவாக்குவதை ஃபிலிகிரீ டிசைன் என்கிறார்கள். இம்மாதிரியான நகை டிசைன்களை உருவாக்குவதற்கு மிகுந்த பொறுமையும், கவனமும் தேவை. வரலாற்றில் இம்மாதிரியான டிசைன்களை விரும்புகிறவர்கள் என எகிப்தியர்கள், இத்தாலியர்கள், மற்றும், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர்கள் அடையாளம் காணப்படுகிறார்கள். இந்தியாவிலும் வரலாற்றுக் காலத்தின் ஆரம்ப நூற்றாண்டுகளில் ஃபிலிகிரி வேலைப்பாடுகள் புழக்கத்தில் இருந்திருக்கின்றன.

சாம்பிளுக்குச் சில ஃபிலிகிரீ நகை டிசைன்களைப் பாருங்கள்...

இது ஃபிலிகிரீ நெக்லஸ்...

Story image

இது ஃபிலிகிரீ காது தொங்கல் (தொங்கட்டான்)

Story image

நகை வாங்கச் செல்பவர்களில் எத்தனை பேருக்குத் தாம் வாங்கப் போகும் நகைகள் இன்னின்ன விதமான டிசைன்களில் எல்லாம் கிடைக்கும் என்ற பொது அறிவு இருக்குமெனத் தெரியவில்லை. இதெல்லாமும் கூட ஒரு விதமான ஆர்வம் தானே?!. இந்த ஆர்வம் இருந்தால் தானே, நாம் வாங்கும் நகைகளுக்காக நாம் செலவிடக்கூடிய தொகை சரியானதா? இல்லையா? என்ற தெளிவு கிடைக்கக் கூடும்.

இந்தியாவில் கிடைக்கக் கூடிய பொதுவான சில ஆபரண டிசைன்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்;

Story image

Story image

Story image

Story image

Story image

Story image

Story image

Story image

Story image

Story image

Story image


இவற்றில், இந்த ஃபிலிகிரீயையே எடுத்துக் கொள்ளுங்கள். டிசைன்கள் பார்க்க அழகாகத் தான் இருக்கின்றன. ஆனால் இவற்றைப் பராமரிப்பது என்று எடுத்துக் கொண்டால் சற்றுச் சிரமம் தான்.

ஃபிலிகிரீயின் பிளஸ் & மைனஸ்...

  • இந்த வகை டிசைன்களில் சீக்கிரமே அழுக்கு சென்று தங்கிவிடும்.  ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் சுத்தமாக ஒரு மென்மையான வெண்ணிறத்துணியால் திடைத்து பத்திரப்படுத்துவதே சிறந்த பராமரிப்பு முறை. எனவே பராமரிக்கச் சோம்பல் படுகிறவர்கள் எனில் தயவு செய்து இந்த டிசைன்களைத் தவிர்த்து விடலாம்.
  • அது மட்டுமல்ல, இந்த வகை டிசைன்களைச் செய்யும் போது மிகவும் பொறுமையாகவும், கவனமாகவும் செய்ய வேண்டுமென்பதால் செய்கூலி இவற்றில் அதிகமிருக்கும்.
  • அதோடு கூட இந்த வகை நகை வடிவமைப்பில் அதிகமும் சிறு, சிறு தங்க உருண்டைகள் மற்றும் கம்பிகள் பயன்படுத்தப் படுவதால் அவற்றை நகையில் பொருத்தவும், இணைக்கவும் வேறு உலோகங்களையும் தங்கத்துடன் சற்றுக் கலக்க வேண்டியது வரலாம். எனவே இம்மாதிரி நகைகளை வாங்கும் போது தூய 22 கேரட் ஆபரணத் தங்கத்திற்கான பிஸ் ஹால்மார்க் முத்திரை இருக்கிறதா? என நகையை ஒன்றிற்குப் பலமுறை சோதித்துப் பார்த்த பிறகே வாங்க வேண்டும்.
  • அதோடு இம்மாதிரி நகைகளில் சேதாரமும் அதிகம் கணக்கிடப்படலாம், ஏனெனில் வேலைப்பாடு மிக்க இந்த நகைகளை உருவாக்கும் போது ஃபினிஷிங் கச்சிதமாக அமைவதற்காக பிசிறுகள் நீக்கப் படும் போது சேதாரம் அதிகமாக வாய்ப்பு உண்டு.

எனவே, நகை வாங்கச் செல்லும் முன் ஒன்றிற்கு இருமுறை, என்ன நகை வாங்கப் போகிறோம்? எந்த டிசைனில் வாங்கப் போகிறோம், வாங்கும் நகைகளின் பயன்பாடு எல்லாவற்றையும் வீட்டிலேயே யோசித்து ஒரு தெளிவான தீர்மானத்திற்கு வந்த பிறகே இனிமேல் நகைகள் வாங்கச் செல்லுங்கள்.

Image courtesy: financial express, cultural india.com.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.