இப்படியெல்லாம் சமைத்தால் உங்கள் உணவு விஷமாகிவிடும்!

ஆரோக்கியத்துக்கான முதல்படி நாம் உண்ணும் உணவுதான். ஆனால் இதில் முக்கியமானது
இப்படியெல்லாம் சமைத்தால் உங்கள் உணவு விஷமாகிவிடும்!

ஆரோக்கியத்துக்கான முதல்படி நாம் உண்ணும் உணவுதான். ஆனால் இதில் முக்கியமானது நீங்கள் எந்த உணவை உட்கொள்கிறீர்கள் என்பது அல்ல, அது எப்படி சமைக்கப்படுகிறது என்கிற தயாரிப்பு முறையாகும். இந்திய பாரம்பரியத்தில், உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். ஒரு உணவை இப்படித்தான் தயாரிக்க வேண்டும் என்ற முறை உண்டு. ஒரு உணவை சமைக்கும் போது அதன் ஊட்டச்சத்த்துகளை இழந்து விடாமல் சமைக்க வேண்டும். ஆனால் ருசிக்காக நன்கு பொறிக்கப்பட்ட உருளைக்கிழங்கு அல்லது  ப்ரோக்கோலியால் உங்கள் உடலுக்கு எந்தப் பயனும் இல்லை. அது டாக்ஸின் எனப்படும் நச்சுக்களை உற்பத்து செய்து நாளாவட்டத்தில் கேன்சர் போன்ற நோய்களை உருவாக்கிக் விடக் கூடும். பின்வரும் சமையல் முறைகளைத் தவிர்த்துவிடுவது உடல் நலத்துக்கு நல்லது.

டீப் ஃப்ரை (Deep Fry)

எத்தனையோ புத்தகங்களில் படித்திருந்தும், மருத்துவர்கள் அறிவுரை கேட்டிருந்தும், பொறிக்கப்பட்ட உணவு வகைகளை பெரும்பாலானோர் அடிக்கடி சமைத்து சாப்பிடுகிறார்கள். அது தவறு. காரணம் அதிக நேரம் காய்கறிகளை எண்ணெயில் பொறிப்பதால், அக்காய்கறியில் இயற்கையில் உள்ள சத்துக்கள் இழக்கப்பட்டு கூடுதலாக கொழுப்புச் சத்தும் அதிகரிக்கும். இதயம் சம்மந்தப்பட்ட நோய்களை வரவழைத்துக் கொள்ள இத்தகைய சமையல் வழி வகுத்துவிடும்.

பேன் ஃப்ரை (Pan Fry)  

பேன்  பயன்படுத்தி காய்கறிகளை பொறிப்பதால் உணவின் சத்துக்கள் மொத்தமாக இழக்கப்படுவதுடன், நச்சுக்களையும் ஏற்படுத்திவிடும். பேனில் நீங்கள் ஃப்ரை செய்யும் போது உருவாகும் சில வேதியல் பொருட்கள் உடல் நலத்துக்கு மிகவும் தீங்கானது. அக்ரலமைட் (Acrylamide) எனும் இந்த வேதிப்பொருள், உணவுப் பொருள் அதிகபட்ச வெப்பத்தில் சமைக்கப்படும் போது தானே உருவாகும். இது கேன்சர் உள்ளிட்ட சில நோய்களுக்கான காரணியாகும். எந்த அளவுக்கு பொறித்த உணவுகளின் நிறம் அடர்த்தியாக உள்ளதோ அந்த அளவுக்கு அதிகமான அக்ரலமைட் உருவாகியுள்ளது என்று அர்த்தம்.

க்ரில்லிங் 

க்ரில்லிங் முறையில் சமைப்பது ஆரோக்கியம் என்று சிலர் நம்புவார்கள். ஆனால் எந்தந்த உணவை அம்முறையில் சமைக்கலாம் என்பதை அறிந்து சமைக்க வேண்டும். இறைச்சியை க்ரில்லிங் முறையில் தயாரிப்பது அவ்வுணவின் ஊட்டச்சத்தைக் கெடுப்பதுடன், கேன்சர் வருவதற்கான காரணியாகிவிடும். இறைச்சியில் சர்க்கரை, கிரியாடைன் மற்றும் அமினோ அமிலங்கள் இருப்பதால் அதிகமான வெப்பத்தில் சமைக்கும் போது ஹெடிரியோசைக்ளிக் அமைன்ஸ் (heterocyclic amines) எனும் வேதிப்பொருள் உருவாகும். இந்த வேதிப்பொருள் புற்றுநோயை உருவாக்கக் கூடிய தன்மையை உடையது. எனவே க்ரில்லிங் முறை அதிக கேடுகளை உடலுக்கு ஏற்படுத்தும்.

புகையவிடுதல் (ஸ்மோகிங்)

புகைப் பிடிப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது நமக்குத் தெரிந்த விஷயம். சில உணவை புகைய விட்டுச் சமைப்பது அதன் ருசியை அதிகரிக்கும் என்று நம்புகிறார்கள். ஆனால் புகைபிடித்த உணவை சாப்பிடுவது மிகவும் ஆபத்தானது. புற்றுநோயை உருவாக்கும் கலவைகளான HCAs மற்றும்   polycyclic aromatic hydrocarbons (PAHs) போன்றவற்றை புகைத்த உணவு உருவாக்க காரணமாக உள்ளது

மைக்ரோவேவ்

மைக்ரோவேவில் சமைக்கும் போது அதிக அளவு நுண்ணலை கதிர்வீச்சு (ரேடியேஷன்) வெளிப்படுத்துவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே அதில் சமைக்கப்படும் உணவு உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும். 2011-ம் ஆண்டு உலக சுகாதார அமைப்பின் ஆய்வின் படி, சமைப்பதற்கு அல்லது சூடுபடுத்துவதற்காக தொடர்ந்து மைக்ரோவேவ் ஓவன்களைப் பயன்படுத்தும் போது அதன் கதிர்வீச்சுத் தாக்கத்தால் மூளைப் புற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

மேற்சொன்ன வகைகளில் உணவை சமைக்கும் போது நேரம் மிச்சப்படலாம், அல்லது ருசி கூடலாம். ஆனால் உடல் நலத்துக்கும் அதைத் தொடர்ந்து உயிருக்கும் பேராபத்தை சிறுக சிறுக விளைத்துவிடும் என்கிறார்கள் நிபுணர்கள். எனவே நம் பாரம்பரிய முறைப்படி சமைப்பதே நல்லது. அதற்காக விறகு அடுப்பில் சமைக்க வேண்டும் என்பதில்லை. நவீன கருவிகளை எந்த அளவுக்குப் பயன்படுத்த வேண்டுமோ அதற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். மேலும் சமையல் செய்வதை ஒரு வேலையாகச் செய்யாமல் விருப்பத்துடன் செய்ய வேண்டும்.

ஆவியில், மிதமான வெப்பத்தில் சமைக்கப்படும் உணவுகள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் பழங்கள் மற்றும் காய்கறிகளைத் தேர்ந்தெடுப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கான சிறந்த வழியாகும்.

நன்றி - டெய்லி மிரர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com