
நீண்ட பகல்களும், வெப்பமான இரவுகளும் அதிகரித்துவிட்ட கோடை காலம் இந்த வருடமும் வாட்டத் தொடங்கிவிட்டது. வெயில் காலம் வந்துவிட்டால் பலருக்கு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும். பருவ நிலை மாற்றங்கள் குணங்களில் சில மாறுதல்களை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாது. ஆனால் எல்லா காலங்களிலும் கூலாக இருப்பவர்களைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறதா? காரணம் அவர்கள் எந்த நிலையிலும் தங்கள் மன நிலை மற்றும் உடல் நிலையில் அக்கறை கொள்பவராக இருப்பார்கள். நாமும் சில விஷயங்களில் கவனமாக இருந்தால், என்ன கொடுமை இது என்று சொல்வதற்குப் பதிலாக ஆஹா வெயில் என்று சொல்லலாம். வெயில் காலத்தில் உணவில் அதிகப்படியான காரம், கரம் மசாலா சேர்க்க கூடாது. அசைவ உணவுகளை குறைத்தும் சாப்பிடுவது நல்லது. தினமும் ஒருவகை கீரை, தர்பூசணி, நுங்கு, வெள்ளரி பிஞ்சு, தக்காளி, வாழைத்தண்டு, வெங்காயம், திராட்சை, கமலா ஆரஞ்சு, சாத்துக்குடி போன்றவற்றை சாப்பிட்டால் உடலின் வெப்பம் குறைந்து குளிர்ச்சியாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.