கலர் கலரான பட்டுப்புடவைகளை கரை படியாமல் பத்திரப்படுத்த சில வழிமுறைகள்!

பட்டுப் புடவை போன்ற விலையுர்ந்த புடவைகளை வாங்குவதற்கு முன் அதை கடையை விட்டு வெளியில்
கலர் கலரான பட்டுப்புடவைகளை கரை படியாமல் பத்திரப்படுத்த சில வழிமுறைகள்!
  • பட்டுப் புடவை போன்ற விலையுர்ந்த புடவைகளை வாங்குவதற்கு முன் அதை கடையை விட்டு வெளியில் சூரிய வெளிச்சத்தில் சரி பார்த்து வாங்கவும். 
  • விலை உயர்ந்த புடவையை அணிவதற்கு முன், மறக்காமல் அதில் ஃபால்ஸ் தைத்து அணியவும்.
  • புடவையை அணிந்து கழற்றியவுடன் மடித்து வைப்பதைத் தவிர்க்கவும். துணிகளில் உள்ள வியர்வை, கறைகளை ஏற்படுத்தும்.
  • சாப்பிடும் போது ஏதேனும் கறை பட்டால் உடனே தண்ணீரில் அந்த இடத்தை சுத்தம் செய்துவிடவும்.
  • வார்ட்ரோபில் பூச்சிகளை விரட்ட ஒரு துணியில் ஓடோனில் சுற்றி வைக்கவும். நேரடியாக வைத்தால் இதன் வாசனை துணிகளில் ஒட்டிக் கொள்ளும். 
  • ரச கற்பூரத்தை தவிர்க்கவும். இதில் உள்ள ரசாயனப் பொருட்கள் ஜரிகை கறுப்பதற்கு காரணமாகிறது.
  • வாசனைப் பொருட்களை நேரடியாக ஜரிகையில் தெளிப்பதைத் தவிர்ப்பது நல்லது.
  • விலை உயர்ந்த துணி வாங்கி உடைகள் தைக்க வேண்டும் என்றால் அதற்கு மறக்காமல் நல்ல தரமான, அதே நிறத்தில் உள்ள லைனிங் துணியை வாங்கவும். லைனிங் வைக்கவில்லை என்றால் வியர்வையால் உடை கெட்டுப் போக வாய்ப்புண்டு.
  • டிஷ்யு, பனாரஸ் போன்ற புடவைகளை மடித்து வைத்தால் விரைவில் மடிப்பில் கிழிந்து போகும். எனவே, நூல்கண்டு போல சுற்றிதான் வைக்க வேண்டும்.
  • ஜர்தோசி, சமிக்கி வேலைப்பாடு உள்ள புடவைகளை வெள்ளை பருத்தித் துணியில் சுற்றி வைக்க வேண்டும். 
  • காஞ்சிபுரம் பட்டுப் புடவைகளை ஒன்று இரண்டாக மடிக்க வேண்டும். பட்டுப்புடவைகளை டிரைகிளீன் மட்டுமே செய்ய வேண்டும்.
  • நிறைய புடவைகளை ஒரே பெட்டியிலோ, பீரோவிலோ அழுத்தி அடுக்கி வைக்கக் கூடாது. இப்போது புடவைகளுக்கான கவர் கிடைக்கிறது. அதில் புடவைகளை மடித்து வைக்கலாம்.
  • ஷிபான் புடவைகளை ஹாங்கரில் தொங்கவிட வேண்டும்.
  • சமிக்கி வேலைப்பாடு உள்ள புடவைகளை பிரஷ் போட்டு துவைக்காமல், சோப்புத் தண்ணீரில் நனைத்து அலசினால் போதுமானது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com