

இளையராஜா தரப்பில் இருந்து ஒரு மொபைல் ஆப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கான விளம்பரத்தில் இளையராஜாவே நடித்திருப்பதுதான் சிறப்பு. மொபைல் ஆப்பின் பெயர் Maestro's Music. ராஜாவின் இசையை உயர் தரத்துடன் தருகிறது. லாக் ஸ்க்ரீனில் இருந்தே பயன்படுத்த முடிகிறது. ஒவ்வொரு முறையும் ஸ்க்ரீன் திறந்து ஆப்புக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.
ஜிமெயில் அல்லது ஃபேஸ்புக் மூலம் லாக் இன் செய்து நமக்காக ஸ்பெஷல் ப்ளேலிஸ்ட் தயார் செய்துகொள்ளலாம். நமக்கு வேண்டிய பாடல்களை டவுன்லோடு செய்துகொள்ளும் வசதியும் தருகிறது இந்த ஆப்.
முதலில் சில நாட்களுக்கு இலவசம். அதன் பின், அன்லிமிடெட் டவுன்லோடுக்கு மாதம் 99 ரூபாய் கட்டணம் கேட்கிறது. ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.