
மதுப் பிரியர்கள் தேடிப் பிடித்து விரும்பி அருந்துவது மெர்குரி ஒயின் ஆகும். இந்த வகை ஒயின் இந்தியாவில் மட்டும் கிடைக்கும். நாசிக் பகுதியில் பணம் மட்டும் அச்சடிக்கப்படுகிறது என்று நினைக்க வேண்டாம். ஒயின் தயாரிப்பிலும் சக்கை போடு போடுகிறந்து மகாராஷ்ட்ராவில் உள்ள நாசிக் பகுதியில் அமைந்துள்ள ஓசார். இப்பகுதியில்தான் இந்த மெர்குரி ஒயின் தயாரிக்கப்படுகிறது.
அடுத்து விண்டேஜ் ஒயின் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த ஒன்று. கர்நாடகா மாநிலத்தில் பசுமை பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. பெயருக்கு ஏற்றவகையில் விண்டேஜ் ஒரு எலைட்டான மதுவகை. இந்த ஒயின் பலவகையான வெரைட்டிகளில் கிடைக்கிறது.
நாசிக் அருகில் உள்ள நாபா பள்ளத்தாக்கில் மிகப் பெரிய திராட்சை தோட்டம் உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் ஒயினை இண்டஸ் ஒயின் என்கிறார்கள். சாவிக்னன் பிளாங்க் என்னும் வொயிட் ஒயினை இங்கு தயாரிக்கிறார்கள்.
ஸீகிராம் ஸீ கிராம் இந்தியாவிலேயே மிகவும் பிரபலமானது. ஆனால் இது ஒயின் பிராண்ட் இல்லை. நைன் ஹில்ஸ் என்பதே இதன் பிராண்ட் பெஇயர். 2007-ம் ஆண்டுமுதல் இது பிரபலமானது.
மகாராஷ்டிராவின் இகத்புரி பகுதியில் உள்ள திராட்சைகளான சிராஷ், ரோசா போன்றவற்றை நொதித்துத் தயாரிக்கப்படுகிறது ஜம்ப்பா ஒயின் . இது மது அருந்துபவர்களின் பெரும் விருப்பத்தை சம்பாதித்துள்ளது.
பெங்களூர் அருகிலுள்ள நந்தி ஹில்ஸில் அமைந்துள்ள தோட்டத்திலிருந்து எடுக்கப்பட்ட திராட்சைகளை நொதித்து குரோவர் எனும் சுவைமிகக் ஒயினாக தயாரிக்கிறார்கள். மேலும் இது மிகவும் பழமையான ஒயினாகும்.
நாசிக்கில் அமைந்த திராட்சைத் தோட்டத்ஹ்டிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவகை ஒயினை சுலா என்று அழைக்கிறார்கள். இந்த பிராண்ட் ஒயின் இந்தியாவில் மிகவும் பிரபலம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.