சீயக்காய் நலன்கள்

சீயக்காய் நலன்கள்

சீயக்காய் என்பது - நம் கூந்தலையும், தலைச்சருமத்தையும் பராமரிக்க காலம் காலமாக நாம்
Published on

சீயக்காய் என்பது - நம் கூந்தலையும், தலைச்சருமத்தையும் பராமரிக்க காலம் காலமாக நாம் பயன்படுத்தி வரும் பொருட்களில் ஒன்றாகும். சீயக்காய் உங்கள் கூந்தல் மற்றும் தலைச்சருமத்திற்கும் சேர்த்து பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. ஒரு தலைசிறந்த இயற்கை சுத்திகரிப்பானாக செயல்படும். மேலும் ரசாயனம் கலந்த ஷாம்புவில் இருந்து, உங்கள் தலைச்சருமம் பாதுகாக்கப்படுகிறது. முடிக்கு நல்ல பாதுகாப்பு வழங்குகிறது. பலர் இன்னும் கூந்தலுக்கு சோப்புகளை தான் பயன்படுத்துகின்றனர். அவை உங்கள் தலைச்சருமத்தை வறட்சியாக்கி, செபோர்ஹெயிக் டெர்மட்டிட்டிஸ் எனப்படும் அழற்சி நிலையை ஏற்படுத்துவதால், அவை கூந்தலுக்கு பரிந்துரைக்கப்படுவதில்லை.

• சீயக்காய் மிதமான தன்மையை கொண்டுள்ளதால், மென்மையான தலைச்சருமத்தை கொண்டவர்களும் கூட இதனை பயன்படுத்தலாம். இது தலைச்சருமத்தை வறட்சியாக்காது.

• உங்கள் கூந்தலில் உள்ள அதிகப்படியான சிக்கலை நீக்கவும் சீயக்காய் உதவும். அதனால் சீயக்காய் பயன்படுத்திய பிறகு தனியாக கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை.

• மயிர்கால்களுக்கு வைட்டமின் "டி' மற்றும் "சி' போன்ற ஊட்டச்சத்துக்களை அளித்து, இது தலைச்சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

• இது மற்ற மூலிகைகள் மற்றும் இயற்கை சாறுகளுடன் நன்றாக ஒன்றிவிடும். அதனால் கூந்தலின் ஆரோக்கியத்திற்கு பயனாக அமையும்.

• கூந்தலுக்கு சாயம் போடுவதற்கு முன், அது இயற்கை சாயமாக இருந்தாலும் கூட, கூந்தலை சீயக்காய் கொண்டு கழுவ வேண்டும். இதனால் சாயம் அதிக நேரம் ஊறி, நீண்டு நிலைக்கும். 
- கவிதா பாலாஜி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com