இவரைப் போல ஒரு அதிகாரி இருந்தால் நாடு முன்னேறும்! திரைப்படமாகும் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷாலினியின் வாழ்க்கை வரலாறு!

ஷாலினி ஐ.ஏ.எஸ் கர்நாடகத்தில் பிரபலம். பஞ்சாயத்து நிர்வாகம் சரிவர நடக்கவும்
இவரைப் போல ஒரு அதிகாரி இருந்தால் நாடு முன்னேறும்! திரைப்படமாகும் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஷாலினியின் வாழ்க்கை வரலாறு!
Published on
Updated on
2 min read

ஷாலினி ஐ.ஏ.எஸ் கர்நாடகத்தில் பிரபலம். பஞ்சாயத்து நிர்வாகம் சரிவர நடக்கவும், சாதாரண மக்கள் அரசின் பல தரப்பட்ட உதவிகளை உரிமையுடன் கேட்டுப் பெறவும் ஷாலினி ஐ.ஏ.எஸ் எடுத்த நடவடிக்கைகள் மக்களின் பாராட்டுகளைப் பெற்றதுடன் நின்றுவிடவில்லை. பிரதமரிடம் தேசிய விருது பெற்றிருக்கும் ஷாலினி, தற்போது கர்நாடகா அரசில் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையில் முதன்மை செயலாளராகப் பணி புரிகிறார். ஷாலினியின் கணவர் ரஜ்னிஷ் கோயல். அவரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி. 

ஷாலினியின் அப்பாவும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி. ஷாலினியின் முன்னோர்கள் ஒன்றுபட்ட இந்தியாவில் வசித்தாலும், நாடு பிரிவினை செய்யப்பட்டதும், அவர்கள் வாழ்ந்த பகுதி பாகிஸ்தானுக்குப் போய்விட்டது. தாய்மொழியில் ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதி வெற்றி பெற்ற ஷாலினி 1989- இல் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற பெண்களில் முதலாவதாக வந்திருந்தார். தனது ஐ.ஏ.எஸ் நிர்வாக அனுபவங்களை இந்த ஐ.ஏ.எஸ் தம்பதிகள் "ஐ.ஏ.எஸ் தம்பதிகளின் கனவு' என்ற தலைப்பில் நூலாக எழுதி வெளியிட்டுள்ளனர். நூலும் நல்ல விற்பனையானதால் அந்த நூலை அடிப்படையாக வைத்து கன்னட திரைப்படம் ஒன்று உருவாகிறது. "ஷாலினி ஐ.ஏ.எஸ்' என்ற பெயரில் தயாரிக்கும் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு பாகிஸ்தானிலும் நடக்குமாம். இந்தப் படத்தை இயக்குபவர் விருது பட இயக்குநர் நிகில் மஞ்சு. 

ஷாலினியின் அப்பா இறந்த பிறகு தனது உடல் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புதல் தந்திருந்தார். அப்பாவின் வழியில் தனது உடல் உறுப்புகளைத் தானம் செய்ய ஒப்புதல் தந்திருக்கும் ஷாலினி, உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கவும் பரப்புரை செய்து வருகிறார். கர்நாடகா மாநில பெண்கள் பல்கலைக்கழகம் பெண்களின் நலனில் ஷாலினியின் பங்களிப்பிற்காக கெளரவ முனைவர் பட்டம் வழங்கி சிறப்பு செய்திருக்கிறது.

சாதாரணமாக ஒருவரின் வாழ்க்கைப் படமாகும்போது சம்பந்தப்பட்டவரின் பெயரை வைக்க மாட்டார்கள். ஆனால் ஷாலினி ஐ.ஏ.எஸ் கர்நாடகத்தில் பெயர் சொல்லலும் ஐ.ஏ.எஸ் அதிகாரி என்பதால் அவரது பெயரையே படத்தின் தலைப்பாக வைத்துவிட்டார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com