
திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமான நிகழ்வு. அதுவும் புது மணப் பெண்ணுக்கு, அது மறக்கவே முடியாத வாழ்நாள் கனவு. அந்த நாள் தான் அவள் தன் வாழ்க்கையில் புதுப் பாதையில் அடியெடுத்து வைக்கிறாள். ஒரு பெண்ணுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையையும் திருப்பிப் போட வைக்கும் நிகழ்வுவான அத்தகைய திருமண நாள் எப்படியிருக்க வேண்டும்? சந்தோஷம், கொண்டாட்டம் போன்றவற்றுடன் விழாவைப் போலச் சிறப்புடன் இருக்க வேண்டுமல்லவா? இது எப்படி சாத்தியமாகும் என யோசிக்கிறீர்களா? ஆட்டம் பாட்டம் இசை நடனம், உற்சாகம், குதூகலம், சந்தோஷம் என அந்த நாளே வண்ண வண்ணமாக ஜொலிக்க வேண்டும். எல்லாவற்றிலும் மேலாக மிக மிக முக்கியமான விஷயம் சரியான அழகான நகைகள் எந்த பெண்ணின் மனத்தையும் கொள்ளை கொள்ள வைக்கும்.
உலக அழகி மனுஷி சில்லரும் இதையே தான் சொல்கிறார். கரீனா கபூரிடம் தனது கனவு திருமணத்தை மனுஷி சில்லர் விவரித்தபோது, கரீனா கபூருக்கே மீண்டும் ஒரு முறை திருமணம் செய்து கொள்ளலாமா என்று ஆச்சரியப்பட வைத்துவிட்டது. எப்படி? உணவு மேஜையில் தன்னுடைய கனவுத் திருமணம் பற்றி கரீனாவிடம் மனுஷி சில்லர் கூறுகையில், தன்னை ஒரு மணப்பெண்ணாக சித்தரித்து வரைந்து விளக்குகிறார். ஆடல் பாடல் என கொண்டாட்டமாக இருக்கும் அதில் சில்லர் கண்ணைக் கவரும் விதமாக தனித்துவம் மிக்க நகையலங்காரம் செய்துள்ளார். அதைப் பார்த்து வியந்த கரீனா, 'ஆஹா! மீண்டும் ஒருமுறை நானும் இதே போலத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்!’ என்றார்.
மலபார் தங்கம் மற்றும் வைர நகைகள் மிகச் சமீபத்தில் மனுஷி சில்லர் மற்றும் கரீனா கபூர் கான் ஆகியோரின் முன்னிலையில், 'ப்ரைட்ஸ் ஆஃப் இந்தியா சீஸன் 6’ (Brides Of India Season 6) என்ற பெயரில் மணப்பெண்ணுக்கான தனித்துவமிக்க நகைகளை வெளியிட்டனர். இந்திய மணமகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நகைகளைப் பார்த்து மகிழ்ந்த உலக அழகி மனுஷி சில்லர் தன் கனவு திருமணத்தை நினைவாக்க மலபார் கோல்ட் நகைகள் மட்டுமே சிறந்த வழி என்று மனம் திறந்து கூறினார்.
மனத்துக்குப் பிடித்த தங்க நகைகளை மலபார் கோல்ட் ஹவுஸில் வாங்கி அணிந்து மகிழுங்கள்! உங்கள் மண வாழ்க்கைச் சிறக்க நல்வாழ்த்துக்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.