உலகில் உள்ள எந்தச் செல்வத்தையும் விட மேலான செல்வம் எது?

ஒரு கிராமத்தில் பாவெலும், பியோதரும் வசித்தார்கள். பாவெலுக்குக் குதிரைகள்தான் மிகவும் பிடிக்கும்.
உலகில் உள்ள எந்தச் செல்வத்தையும் விட மேலான செல்வம் எது?

ஒரு கிராமத்தில் பாவெலும், பியோதரும் வசித்தார்கள். பாவெலுக்குக் குதிரைகள்தான் மிகவும் பிடிக்கும். உலகத்திலேயே பெரிய செல்வம் குதிரைகள்தான் என்பது அவன் எண்ணம். ஆனால் பியோதர், இந்த உலகத்தில் குதிரைகளைவிட மிகப் பெரிய செல்வம் நண்பர்கள்தான் என்று சொல்வான். இந்த விஷயம் குறித்து அடிக்கடி இருவரும் வாக்குவாதம் செய்து கொள்வார்கள். இறுதியில் வெளிநாடுகளுக்குச் சென்று குதிரைகளையும், நண்பர்களையும் சம்பாதிப்பது என்று அவர்கள் முடிவு செய்தார்கள்.

எனவே அவர்கள் பயணம் புறப்பட்டார்கள். ஒரு வருட காலம் அவர்கள் வெளிநாடுகளில் சுற்றியலைந்து குதிரைகளையும், நண்பர்களையும் சம்பாதித்து அவர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பினார்கள். பாவெல் கேட்டான்:

‘நீ எத்தனை குதிரைகளைச் சம்பாதித்தாய்?’

‘நான் தொண்ணூற்றி ஒன்பது குதிரைகளைச் சம்பாதித்தேன். இன்னும் ஒன்று கிடைத்திருந்தால் என்னிடம் இப்போது நூறு குதிரைகள் இருக்கும்’ என்றான்.

அதைக் கேட்டு பியோதர்.

‘ஒரு காரியம் செய்யலாம். என் குதிரையை நான் உனக்குக் கொடுத்துவிடுகிறேன். அப்போது உன்னிடம் நூறு குதிரை இருக்கும்’ என்றான்.

பாவெலுக்கு மகிழ்ச்சி. அவன் சொன்னான். ‘நீ எத்தனை நண்பர்களைச் சம்பாதித்தாய்’

‘நான் தொண்ணூற்றி ஒன்பது நண்பர்களைச் சம்பாதித்தேன். இன்னும் ஒன்று கிடைத்திருந்தால் என்னிடம் இப்போது நூறு நண்பர்கள் இருப்பார்கள்’

‘அப்படியென்றால் நீ சம்பாதித்த தொண்ணூற்றி ஒன்பது நண்பர்களுடன் நானும் சேர்ந்தால் உனக்கு நூறு நண்பர்கள் இருப்பார்கள் அல்லவா?’

அவன் சொன்னதை சந்தோஷத்துடன் ஏற்றுக் கொண்டான் பியோதர். வீட்டுக்குச் சென்ற பாவெல் தன் அம்மாவிடம் சொன்னான்:

‘அம்மா என் கனவு நினைவாகிவிட்டது. எனக்கு இப்போது சொந்தமாக நூறு குதிரைகள் உண்டு’

அதைக் கேட்டு அவன் அம்மாவும் மகிழ்ந்தார்கள். பியோதரும் தன் அம்மாவிடம் இப்படிச் சொன்னான்.

'அம்மா, நான் நூறு நண்பர்களைச் சம்பாதித்தேன்’

அம்மா சொன்னார்கள்.

நூறு நண்பர்கள் இருப்பது நல்லதுதான். ஆனால் அவர்கள் ஆத்மார்த்தமான நண்பர்களா என்று தெரிந்து கொள்ள வேண்டும்’

அப்படியா?

‘ஆமாம். நீ இப்போதே சந்தைக்குச் சென்று உன் சொத்தையெல்லாம் இழந்துவிட்டாய் என்றும் உனக்கு வாழ்வதற்கு வழியில்லை என்றும் அறிவித்துவிடு. அப்போது உன் நண்பர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம் அல்லவா?’

பியோதர் தன் அம்மா சொன்னது போலவே செய்தான்.

அன்று இரவு பாவெலின் வீட்டுக்குத் திருடர்கள் வந்தார்கள். அவர்கள் நூறு குதிரைகளையும் திருடிச் சென்றுவிட்டனர். மறுநாள் காலையில்தான் பாவெலுக்கு குதிரைகள் திருடுபோன விஷயம் தெரியும். அவன் பல இடங்களிலும் அலைந்து தேடினான் என்றாலும் குதிரைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏமாற்றத்துடன் வீட்டுக்குத் திரும்பிய அவன் தன் அம்மாவிடம் சொன்னான்.

எனக்கு ஒருநாள் மட்டும்தான் மகிழ்ச்சி கிடைத்தது. இப்போது இந்த உலகத்தில் மிகவும் துயரமானவன் நான் தான்.

அதைக் கேட்டு அவன் அம்மாவும் வருந்தினார்கள்.

இந்த நேரத்தில் பியோதரின் வீட்டில் என்ன நடந்தது?

அதிகாலையிலேயே பியோதரின் நண்பர்கள் பணமும், உடைகளும் உணவுப் பொருட்களும் எடுத்துக் கொண்டு அவன் வீட்டுக்கு வந்துவிட்டார்கள். கொண்டு வந்த பொருட்களையெல்லாம் பியோதரிடம் கொடுத்துவிட்டுச் சென்றார்கள்.

நீங்கள் கவலைப்படாதீர்கள். நாங்கள் உயிரோடு இருக்கும் வரை நீங்கள் சிரமப்பட தேவையில்லை’

அதைக் கேட்டு மகிழ்ந்தார்கள் பியோதரின் அம்மா. நண்பர்கள் எல்லோரும் விடைபெற்றுச் சென்ற பிறகு அவர்கள் சொன்னார்கள்.

உன் நண்பர்கள் எல்லோரும் நல்லவர்கள்தான். நீ ஆபத்தில் இருப்பதை அறிந்தவுடன் உதவி செய்ய அவர்கள் ஓடி வந்துவிட்டார்கள்.

அதன் பிறகுதான் பாவெலின் குதிரைகள் திருடுபோன செய்தி அவனுக்குத் தெரிந்தது. உடனே அவன் பாவெலின் வீட்டுக்குச் சென்றான். தன் நண்பர்கள் கொடுத்த பணத்தையும் மற்ற பொருட்களையும் அவன் பாவெலுக்குக் கொடுத்தான்.

நண்பனே, இழந்ததை நினைத்து வருந்தாதே. இவற்றை வைத்துக் கொண்டு மக்ழிச்சியாக வாழ்ந்திரு. நல்ல நண்பர்களைப் பெற்றிருப்பவர்கள் வாழ்க்கையில் எப்போதும் கஷ்டப்பட மாட்டார்கள்.

எனக்கு எல்லாம் புரிந்தது. உலகில் உள்ள எந்தச் செல்வத்தையும் விட மேலான செல்வம் நல்ல நண்பர்கள்தான்!

பிறகு அவர்கள் ஆழ்ந்த நட்புடன் வெகுகாலம் வாழ்ந்தார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com