அப்படி என்ன செய்துவிட்டார் பிரபல எழுத்தாளர் ஷோபா டே?

ஷோபா டே பிரபல பத்திரிகையாளர், ஸ்டார் டஸ்ட் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர். எழுத்தாளர்.
அப்படி என்ன செய்துவிட்டார் பிரபல எழுத்தாளர் ஷோபா டே?

ஷோபா டே பிரபல பத்திரிகையாளர், ஸ்டார் டஸ்ட் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர். எழுத்தாளர். நிறைய புத்தகங்களும் எழுதியுள்ளார். ட்விட்டரில் தான் பார்த்தையும் கேட்டதையும் தனது கருத்தையும் சேர்த்து 'வீக்' இதழில் வாரம்தோறும் பகிர்ந்து கொள்வார்.

அப்படி ஒரு புகைப்படத்தை HEAVY DUTY BANDOBAST IN MUMBAI TODAY என்ற தலைப்பில் எழுதி, மிக அதிக எடையுள்ள ஒரு போலீஸ்காரர் போனில் பேசிக் கொண்டிருப்பதை படம் எடுத்து தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் ஷோபா.

அந்த போலீஸ்காரர் உடல் பருமனாக உள்ளது, அளவுக்கு அதிகமாகவே எனும் அர்த்தத்தில் HEAVY DUTY என நாசூக்காக கிண்டலும் செய்திருந்தார். இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. உண்மையில் இந்த போலீஸ்காரர் ஒரு மத்திய பிரதேச இன்ஸ்பெக்டர். அவருடைய பெயர் தவுலத்ராம் ஜெகாவத். ஆனால் அவர் யார் என ஷோபா டேக்கு தெரியாது. அது பற்றி அவர் தெரிந்து கொள்ளவும் இல்லை. இந்த வைரல் புகைப்படத்தை மும்பையைச் சேர்ந்த, கூடுதல் சதைகளை அகற்றி உதவும் டாக்டர் முபாசல் லக்தா வாலா பார்த்துள்ளார்.

டாக்டர் தவுலத் ராம் ஜெகாவத்துக்கு உதவ முன் வந்தார். அதுவும் தன் ஆஸ்பத்திரியில், முழு சிகிச்சையும் இலவசம் என அறிவித்தார். இதனை ஏற்ற தவுலத் ராம் ஜெகாவத் மருத்துவ மனையில் சேர்ந்தார். 

ஒரு வருடத்தில் தவுலத் ராம் 65 கிலோ எடையை குறைத்துவிட்டார். ஷோபா டேவை, ஃபோன் நம்பரைக் கண்டுபிடித்து பேசினார். தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.  அத்துடன் ஷோபா டேயை நேரில் வந்து சந்தித்து நன்றி கூற விரும்புவதாகவும் கூறினார். குடும்பத்துடன் வாருங்கள் என்று சொன்னார் ஷோபா டே. அதற்கு தவுலத் ராம் இன்னமும் 30 கிலோவை குறைக்க எண்ணியுள்ளேன். அதனையும் குறைத்துவிட்டு, நேரில் வந்து நன்றி கூறுகிறேன் எனக் கூற, ஷோபா டே 'வாருங்கள்' எனக் கூற, தவுலத்ராமுக்கு மிகவும் சந்தோஷம். 

இந்த நிகழ்ச்சியை தனது ட்விட்டரில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் ஷோபா டே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com