எண்ணெய் குடிக்காத உளுந்து வடை செய்வது எப்படி?

கோதுமை மாவில் உப்பு சேர்த்து, லேசாக சுட வைத்த நீர் விட்டு கெட்டியாக பிசைந்து
எண்ணெய் குடிக்காத உளுந்து வடை செய்வது எப்படி?

வடைக்கு வேண்டிய உளுந்தை தண்ணீரில் ஊற வைத்து, தண்ணீர் இல்லாமல் வடிகட்டி விடவும். பிறகு மீண்டும் ஒன்றரை மணி நேரம் ஊற வைத்து, மிளகு, உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து பந்து போல் அரைத்து எடுத்து வடை தட்டினால் சிறிது கூட எண்ணெய் குடிக்காது.வடையும் நன்றாக இருக்கும்.

**

முதல் நாளே பட்டாணி, கொண்டைக்கடலை ஊற வைக்க மறந்து விட்டால் ஒரு பிளாஸ்க்கில் வெந்நீரை நிரப்பி அதில் பட்டாணி அல்லது கொண்டைக்கடலையை போட்டு ஒரு மணி நேரம் ஊற வைத்தால் நன்றாக ஊறி விடும்.

**

பால் காய்ச்ச மறந்து போய் விட்டீர்களா? பால் திரிந்து போகுமோ என்ற பயம் ஏற்படுகிறதா? கவலை வேண்டாம். பாலைக் காய்ச்சும் முன் ஒரு சிட்டிகை சமையல் சோடா கலந்து காய்ச்சினால் பால் திரியாது.

- வீட்டுக்குறிப்புக்கள் என்ற நூலிலிருந்து - சி.பன்னீர்செல்வம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com