ஏன் இந்தியச் சூழலில் சப்தம் இவ்வளவு பெரிய சக்தியாக செயல்பட்டு வருகிறது?

பேருந்துகளில், பணிபுரியும் இடங்களில், மொட்டை மாடிகளில் என எங்கு நோக்கினும் யாராவதொருவர்
ஏன் இந்தியச் சூழலில் சப்தம் இவ்வளவு பெரிய சக்தியாக செயல்பட்டு வருகிறது?

வலைதளத்திலிருந்து...

பேருந்துகளில், பணிபுரியும் இடங்களில், மொட்டை மாடிகளில் என எங்கு நோக்கினும் யாராவதொருவர் தனது தொலைபேசியில் பாடல்களை அதன் முழு ஒலி அளவில் கூட்டி அலறவிட்டபடி மெய் மறந்திருக்கிறார்கள். பலர் தாங்கள் இருக்கும் சூழலைப் பொருட்படுத்துவதே இல்லை....

ஊரில் திருவிழா என்றால் மைக் செட் வைத்து மிகப்பெரும் ஒலி மாசுபாட்டையும் வன்முறையினையும் நிகழ்த்துவது வாடிக்கையாகிவிட்டது. ஊர் முழுக்க ஹாரனைக் கட்டிவிடுவார்கள். இதில் மதப்பற்றாளர்களுக்கு இடையே நுட்பமான போட்டி வேறு நிலவுகிறது. இதனாலேயே திருவிழா சமயங்களில் ஊருக்குச் செல்ல மிகுந்த வெறுப்பாக இருக்கும். அங்கு சென்றாலும் வீட்டினருடன் இயல்பாக இருக்க முடியாது. பேசக்கூட முடியாது. காலை நான்கு மணிக்குத் தொடங்கி இரவு பத்து வரை வன்முறை நீடிக்கும். காரணம் எங்கள் வீட்டின் வாசலிலேயே ஹாரன் கட்டப்பட்டிருக்கும் என்பதுதான். 

ஏன் இந்தியச் சூழலில் சப்தம் இவ்வளவு பெரிய சக்தியாக செயல்பட்டு வருகிறது? இதன் மையப்புள்ளி எதுவாக இருக்கும் என நானும் பலவாறு யோசித்துப் பார்க்கிறேன். ஒரு முடிவுக்கு வருவது சிரமமாகவே இருக்கிறது. நான் கூட சப்தமாக பேசுபவன் தான் என்பதையும் இங்கு ஒப்புக் கொள்ள வேண்டும். 

ஜப்பானிய கலாசாரத்தின் அமைதி நினைவுக்கு வருகிறது. ஒருவர் அமைதியாக இருக்கும் சமயங்களில் நாம் எதாவது பேசினால் அதனை மிகப் பெரும் அவமதிப்பாக எடுத்துக் கொள்வார்களாம். 

https://yamunaiselvan.wordpress.com/

முக நூலிலிருந்து....


சலித்துக் கொள்பவன்,
ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள
ஆபத்தைப் பார்க்கிறான்.
சாதிப்பவன், 
ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள 
வாய்ப்பினைப் பார்க்கிறான்.

- மாரியப்பன்

காற்று பேசும் இசையே... 
உன் சுவாசம்

- பிரகாஷ்

நகம்  வெட்டக் கூட சலிப்புற்று
மனம்  முழுக்க
இயலாமை  பரப்பும்  
நாட்களையே
விட்டுச் செல்கிறது...
"விதி'யெனும்   சதி.

இருக்கும் வரை
இல்லாததை  மட்டும்
தேடிக்கொண்டிருப்பதே...
இருப்பாகிவிடுகிறது

- ரெவித்தம்பி பொன்னன்

பொறுமை என்பது
குழந்தை எழுந்து நின்று
தத்தித் தடுமாறி
நடை பழகுவது போன்றதாகும்!

- கெளதம் சூசைராஜ்

பன்னாட்டு நிறுவனப் பணியாளராய்
டாலர்களில் சம்பாதிப்பது
அதிர்ஷ்டம் என்றால், 
பெற்றோரின் மரணத்துக்குக் கூட
வர இயலாமல் போவது....
துரதிருஷ்டம்.

- கிரிதரன்

சுட்டுரையிலிருந்து...

தவறி விழுந்த விதையே 
முளைக்கும்போது...
தடுமாறி விழுந்த நம் 
வாழ்க்கை மட்டும் சிறக்காதா?
நம்பிக்கையோடு எழுவோம். 

- பொய்யாமொழிசங்கரன்

விடுமுறை நாளில்  
எல்லா குழந்தைகளும் 
ஓரிடத்தில்  சேர்ந்து விளையாடினர்...
அவரவர் செல்போனில்.

- சப்பாணி

வீழ்வது போல் 
ஒருமுறை நடித்துப்பார் 
அப்போது தெரியும்...
உதறும் கரங்கள் எது? 
உதவிக்கரங்கள் எது? என்று...

- தமிழ்பாசக்காரி

எல்லாவற்றிக்கும் பதில் வைத்துள்ளார்கள், 
கேள்விகளை தேடித்தான் நம் ஆயுள் கரைகிறது....

- வால்பையன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com