அள்ள அள்ளப் பணம் வேண்டுமா? இதை மட்டும் செய்யாதீர்கள்!

இவ்வுலக வாழ்க்கைக்கு பணம் மிகவும் முக்கியம். உணவு, உடை, உறைவிடம் இந்த மூன்று அடிப்படைத் தேவைகள்
அள்ள அள்ளப் பணம் வேண்டுமா? இதை மட்டும் செய்யாதீர்கள்!
Published on
Updated on
1 min read

இவ்வுலக வாழ்க்கைக்கு பணம் மிகவும் முக்கியம். உணவு, உடை, உறைவிடம் இந்த மூன்று அடிப்படைத் தேவைகள் மற்றும் அனைத்து தேவைகளுக்கும் பணமே பிரதானம். நல்ல கல்வி கற்பதற்கும் பணம்தான் தேவைப்படுகிறது. பணம் இல்லையேல் எதுவுமே இல்லை. கீழ்க்கணட வார்த்தைகளை விளையாட்டாகக் கூட ஒருபோதும் சொல்லாதீர்கள்.

1. எனக்கு பணம் ஒரு பொருட்டே இல்லை
2. நான் பணத்தை என்றுமே பெரிதாக நினைப்பதில்லை
3. பணம் போனால் போகட்டுமே
4. உன் பணத்தை முகத்தில் விட்டெறிகிறேன்

இதுபோன்ற சொற்களை நீங்கள் அடிக்கடி பேசிக் கொண்டிருந்தால் இதுவே உங்களிடம் நிரந்தரமாகத் தங்கி, பணம் வந்து சேர்வதற்கு பெருந்தடைகள் உருவாகிவிடும். என்ன பாடுபட்டாலும் எதிர்ப்பார்த்த அடிப்படைத் தேவைக்கான பணத்தைக் கூட கண்ணால் பார்க்க முடியாது. அத்தனை தடைகள் வரும்.

பணத்தை வெறுத்துப் பேசுவதும், இழித்துப் பேசுவதும் பழித்துப் பேசும் பழக்கம் உங்களிடம் இருந்தால் அதுவே பணத்தை உங்களிடம் நெருங்க விடாமல் தடுத்துவிடும். மேலும் கடன்காரராகிவிடும் அபாயம் வேறு உள்ளது. கோடீஸ்வரர்கள் யாராவது பணத்தை பழித்துப் பேசுவதை கேட்டிருக்கிறீர்களா? அவர்களிடம் நீங்கள் பழக நேரும் போது நன்றாக கவனித்துப் பாருங்கள். அவர்கள் ஒருபோதும் பணத்தைப் பற்றி இழிவாகவோ, அலட்சியப்படுத்தியோ பேசியிருக்க மாட்டார்கள் என்பதை உணர்வீர்கள். இது மூட நம்பிக்கை இல்லை. இதுவே இயற்கை நியதி.

நீங்கள் வெறுப்பது எதுவும் உங்களை வந்து சேராது. நீங்கள் விரும்புவது எதுவும் உங்களை விட்டு விலகாது. I need money (எனக்கு பணம் தேவை) என்று கூறாதீர்கள். I love money (நான் பணத்தை நேசிக்கிறேன்) என்று கூறத் தொடங்குங்கள். Need எனும் போது தேவைக்கு மட்டும் என்றாகிவிடும். லவ் என்றால்தான் எப்போதுமே நேசிப்பது என்றாகும்.

நன்றி - பிராணயாமம் 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com