உலகின் மிக அதிக எரிச்சலூட்டக்கூடிய சத்தம் எது? இதோ அறிவியல் பூர்வமான விளக்கம்!

ஒட்டுமொத்த உலகையும் ஆத்திரமூட்டக் கூடிய, சஞ்சலப்படுத்தக் கூடிய, கோபமூட்டக்கூடிய ஒரு சத்தம் உண்டென்றால் அது குழாயில் தண்ணீர் லீக்காகும் சத்தம் தான்.
உலகின் மிக அதிக எரிச்சலூட்டக்கூடிய சத்தம் எது? இதோ அறிவியல் பூர்வமான விளக்கம்!

நன்றாக யோசித்துப் பாருங்கள்... வாழ்க்கையில் உங்களை மிக அதிக அளவில் எரிச்சலூட்டிய சத்தம் எதுவாக இருந்திருக்கக் கூடும்? இந்தக் கேள்விக்கான பதில் பலருக்கும் பலவிதமானதாக இருக்கலாம். சிலருக்கு தூக்கத்திலிருந்து திடீரென விழிப்புத் தட்டியபின் கடிகார நொடி முட்களின் டிக் டிக் டிக் சத்தம் மீண்டும் தூக்கத்தில் ஆழ முடியாத அளவுக்கு எரிச்சலை உண்டாக்கியிருக்கலாம். சிலருக்கு ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கையில் அதைக் கெடுப்பதே போல அருகில் ஒலிக்கக் கூடிய குறட்டைச் சத்தத்தைக் கேட்ட மாத்திரத்தில் கொலை வெறி ஏற்படலாம். இன்னும் சிலருக்கு இரவெல்லாம் 10 நிமிடங்களுக்கொருமுறை விழித்துக் கொண்டு கரையும் பிறந்த குழந்தையின் அழுகுரல் கூட சிடுசிடுப்பைத் தரலாம். சிலருக்கு ஃபேன் சத்தம் கூட எரிச்சலுண்டாக்கும். சிலருக்கு டி.வி சேனல்களின் லோகோ, தீம் மியூசிக்கைக் கேட்டால் கூட ஆத்திரம், ஆத்திரமாக வரும். சிலருக்கு யாராவது கூரான நகங்களை சீட்டித் துணியில் தேய்த்தால் வருமே ஒரு கரகர சவுண்டு அதைக் கேட்டாலும் கூட உடலெல்லாம் கூசி சட்டெனக் கோபம் வரும். இப்படி மனித வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஓசை அல்லது சத்தமும் உச்சபட்ச ஆத்திரத்தையோ அல்லது கோபத்தையோ தூண்டக்கூடும்.

சரி இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான சவுண்டு அலர்ஜி இருக்கலாம். ஆனால், உலகில் உள்ள ஒட்டுமித்த மானுட இனத்தையுமே எரிச்சலூட்டக் கூடிய ஒரு சத்தம் உண்டு. அதற்கு நாடு , இனம், மொழி, கண்டங்கள் என்ற எந்த பேதமும் கிடையாது. ஒட்டுமொத்த உலகையும் ஆத்திரமூட்டக் கூடிய, சஞ்சலப்படுத்தக் கூடிய, கோபமூட்டக்கூடிய ஒரு சத்தம் உண்டென்றால் அது குழாயில் தண்ணீர் லீக்காகும் சத்தம் தான்.

துளித்துளியாக தண்ணீர் லீக் ஆகி கீழிருக்கும் வாளித்தண்ணீரில் விழும் ஓசையை கற்பனை செய்து பாருங்கள். கற்பனையே கர்ண கடூரமான எரிச்சலை உண்டாக்குகிறது தானே!

ஆம், உலகம் முழுவதையுமே மிக எரிச்சலடையச் செய்யக்கூடிய அந்த ஓசையைக் கேட்கும் போது நமக்கு ஏன் அப்படியாகிறது என்று எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?

இதோ நேஷனல் ஜியாக்ரபிக் சேனல் அதற்கு அறிவியல் பூர்வமாக விளக்கமளித்திருக்கிறது.

அதிவேக கேமிராக்கள் மூலமாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தண்ணீர் லீக் ஆகும் போது வெளிப்படும் ‘பிளிங்க்’ ஓசையை மிக ஸ்லோவா மோஷனில் வீடியோவாக்கி அதை ஆராயத் தொடங்கினர்.

தண்ணீர் லீக் ஆகி துளித்துளியாக வெளியேறும் போது உள்ளிருக்கும் காற்றுக்குமிழி அதி வேகத்தில் தரையையோ அல்லது தேங்கியிருக்கும் மீதித் தண்ணீரையோ மோதுவதால் தான் அந்த ஓசை உலகிலேயே உச்சபட்ச எரிச்சலுண்டாக்கக் கூடியதாக ஓசையாகக் கருதப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com