சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் இதையெல்லாம் செய்யாதீங்க!

கோடையில் வெப்பமான கதிர்களும், சூடான காற்றும் நம்மை பாடாய்ப்படுத்தி விடும். அதனை சமாளிக்க சில எளிய வழிகள்:
சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் இதையெல்லாம் செய்யாதீங்க!

கோடையில் வெப்பமான கதிர்களும், சூடான காற்றும் நம்மை பாடாய்ப்படுத்தி விடும். அதனை சமாளிக்க சில எளிய வழிகள்:

இறுக்கமான ஆடைகள்

இறுக்கமான ஆடைகள் நம்மை பல்வேறு விதங்களில் தொல்லைப்படுத்துகின்றன. இறுக்கமாக உடைகளை அணிவதால் மேலும், நாம் கோடையின் வெம்மையைக் கூட்டுகிறோம். கோடையில் இப்படி ஆடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும். இறுக்கமான பேண்ட், உள்ளாடைகள், பாவாடைகள் போன்றவை காற்றோட்டத்தை முழுவதுமாக தடை செய்துவிடும். அதிமாக வியர்க்கும், இதனால் வியர்வையானது எளிதில் ஆவியாக முடியாமல் போய்விடுவதால் உடலில் உப்பு படிந்து, அரிப்பு ஏற்படும். இது மட்டுமின்றி கோடைக்காலத்தில் ஜீன்ஸ் போன்ற உடைகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இவ்வகை ஆடைகளால் இறுக்கம், வியர்வைத் தேக்கம், அரிப்பு, தோல் நோய்கள் ஏற்படுகிறது.

செயற்கை இழை ஆடைகள்

தற்போது பாலியஸ்டர் போன்ற ஆடைகள் நிறைய வந்து விட்டன. வெயில் காலத்தில் இவ்வாடைகள் நமது உடலுக்கு ஏற்றவைகள் அல்ல. இவ்வகை ஆடைகள் எளிதில் சூடாவதுடன் நமது உடம்பின் மேல் தோலையும் எளிதில் சூடாக்கிவிடுகின்றன. இதனால் தோலின் நிறம் மாறுவது மட்டுமின்றி தோல் அலர்ஜியும் ஏற்படுகின்றன.

தளர்வான ஆடையே சிறந்தது

கோடைக்காலத்தில் தளர்வான ஆடையையே அணியுங்கள். தளர்வான ஆடைகள் உடம்பை இறுக்கி பிடிக்காது. இதனால் உடம்புக்கு காற்றோட்டம் எளிதில் கிடைக்கிறது எனவே கோடைவெம்மை குறைகிறது.

கெட்டியான நிற ஆடைகள்

கோடையில் நாம் அணியும் ஆடைகளின் நிறத்தை கவனித்தல் அவசியமாகும். காரணம் சிவப்பு, கருப்பு மற்றும் கெட்டியான பச்சை போன்ற நிறங்கள் கோடையில் மேலும் வெம்மையைக் கூட்டுகின்றன. இந்நிறங்கள் சூரிய ஒளியின் உக்கிரத்தைக் கூட்டி விடுகின்றன. இந்நிறங்கள் கண்களை அதிகமாக உறுத்துகின்றன. அதிக ஒளியில் கண்களை உறுத்துவதால் கண் தசைகள் எளிதில் களைப்படையும். இது போன்று பெரிய டிசைன் போட்ட ஆடைகளையும் தவிர்ப்பது நல்லது. எனவே, கோடையில் வெளிர்நிற ஆடைகளையும், சிறிய டிசைன் போட்ட உடைகளையும் அணிதல் நல்லது.

ஆபரணங்கள்

கோடைக்காலத்தில் ஆபரணங்களிலும் கவனம் செலுத்த வேண்டும். அதிக ஆபரணங்கள் மற்றும் ஆபரணங்களை நெருக்கமாக அணிவதால் வியர்வை ஆவியாகாமல் அரிப்பு ஏற்பட்டு தோல் நோய்கள் வர ஏதுவாகிவிடும். எனவே, கோடைக்காலத்தில் எளிமையான நகைகள் அணியுங்கள்.

கைப்பைகள், செருப்புகள்

வெளியே போகும்போது பெரிய கைப்பைகள் பயன்படுத்த வேண்டாம். பெரிய கைப்பைகள் அசௌகரியத்தை தருவது மட்டுமின்றி காற்றோட்டத்தையும் தடுக்கும். கெட்டியான கண்களை உறுத்தும் நிறங்களை கொண்ட கைப்பைகளை தவிர்த்தல் நல்லது. அது போல கோடையில் பிளாஸ்டிக் செருப்புகளை தவிர்த்தல் நல்லது. பிளாஸ்டிக் செருப்புகள் வெயிலில் விரைவாக சூடாகிவிடும். இதனால் கால் பாதங்கள் சூடாகி தோலின் மென்மை பாதிக்கப்படும் எனவே, தோல், ரப்பர், செருப்புகளை பயன்படுத்துதல் சிறந்ததாகும்.

குழந்தைகளுக்கான ஆடைகள்

குழந்தைகளின் ஆடை விஷயத்தில் மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். குழந்தைகளுக்கு வெண்ணிற துணிகளையும், வெள்ளை ஆடைகளையும் பயன்படுத்துதல் குழந்தைகளின் மென்மையான தோலுக்கு சிறந்ததாகும். தளர்வான உடைகள் மற்றும் பருத்தியிலான சாக்ஸ், கையுறைகளை பயன்படுத்துதல் மிக நல்லதாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com