தினமணி இணையதளத்தின் ‘விக்கி க்ளிக்ஸ் இன்ஸ்டாகிராம் புகைப்படப் போட்டி’ புகைப்படங்கள்

நீங்கள் எடுக்கும் அழகான புகைப்படங்கள் ஒவ்வொரு வாரமும் தினமணி டாட் காம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் (www.instagram.com/webdinamani)வெளியிடப்படும்.
தினமணி இணையதளத்தின் ‘விக்கி க்ளிக்ஸ் இன்ஸ்டாகிராம் புகைப்படப் போட்டி’ புகைப்படங்கள்
Published on
Updated on
2 min read

விநாயகர் சதுர்த்தி நம்மில் பலர் கொண்டாடி மகிழும் ஒரு பண்டிகை. இதை முன்னிட்டு, புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள தினமணி இணையதளத்தின் ‘இன்ஸ்டாகிராம் புகைப்படப் போட்டி’க்கு வாசகர்கள் அனுப்பிய சிறந்த புகைப்படங்கள் இங்கே இடம்பெற்றுள்ளன. 

ஜாக்சன் ஹெர்பி, நாகர்கோயில்.

ரவி அருணாச்சலம், தி.நகர் - சென்னை.

விக்னேஷ் காமுதுரை, தேனி.

கடம்பாவனம் தமிழரசு, கொளத்தூர் - சென்னை.

எஸ்.ஆர்.பார்த்திபன்

விக்னேஷ்வரன், சென்னை.

*

உங்களுக்கு புகைப்படக் கலையில் ஆர்வம் இருக்கிறதா? நீங்கள் எடுக்கும் புகைப்படங்கள் உங்கள் கணினி அல்லது மொபைலில் மட்டும் தேங்கிப் போகாமல் அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் எனில் அதற்கான களமாக தினமணி இணையதளத்தின் ‘இன்ஸ்டாகிராம் புகைப்படப் போட்டி’யை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

அந்தந்த வாரத் தலைப்புக்கு ஏற்ற வகையில் புகைப்படம் இருக்க வேண்டும். தனி நபர்களை புகைப்படம் எடுத்து போட்டிக்கு அனுப்பும் போது அந்த நபர்களின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே அனுப்ப வேண்டும். 
நீங்கள் எடுக்கும் புகைப்படங்கள் டிஎஸ்எல்ஆர் கேமரா / டிஜிட்டல் கேமரா மற்றும் மொபைலில் கூட எடுக்கப்பட்டதாக இருக்கலாம்.

நீங்கள் எடுக்கும் அழகான புகைப்படங்கள் ஒவ்வொரு வாரமும் தினமணி டாட் காம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் (www.instagram.com/webdinamani) வெளியிடப்படும்.

போட்டிக்கான சில விதிமுறைகள்

இமெயில் மூலம் மட்டுமே புகைப்படங்களை அனுப்ப வேண்டும். இந்தப் போட்டிக்கான இமெயில் முகவரி: dinamaniphotocontest@gmail.com

புகைப்படத்துடன் உங்கள் மொபைல் எண், இமெயில் ஐடி, ஃபேஸ்புக் ஐடி, ஃபோட்டோ எடுக்கப் பயன்படுத்தப்பட்ட கேமராவின் மாடல், புகைப்படக் குறிப்பு, ஆகியவற்றை மறக்காமல் எழுதி அனுப்புங்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com