பெண்களின் நீண்ட நேர தூக்கத்திற்கு புகழ் பெற்ற ஒரே இடம் எது?

வாழ்க்கைத் தேடலில் தொலைக்கக் கூடாத மிகப்பெரிய புதையல்...மன அமைதி.
பெண்களின் நீண்ட நேர தூக்கத்திற்கு புகழ் பெற்ற ஒரே இடம் எது?
Published on
Updated on
1 min read

வலைதளத்திலிருந்து...
முதன்முறையாக தாஜ்மகாலைப் பார்த்தபோது, அதன் அழகில் மனம் பறி கொடுத்து அப்படியே ஒருகணம் நின்றுவிட்டேன்.  தொடர்ந்து பார்த்தபடியே இருக்கும் ஆசையில் யாருக்கும் தொந்தரவு  தராதவகையில் நடைபாதையை விட்டு விலகி நின்று பார்க்கத் தொடங்கினேன். திரும்பிய கணத்தில் கைக்குட்டை விற்கிற ஒரு சிறுமியின் மீது பார்வை படிந்தது. பயணியர் அனைவரும் வளாகத்தில் நுழைந்த கணத்திலிருந்து தாஜ்மகாலின் மீது வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்தபடியே இருக்க, அவள் பார்வை மட்டும் அந்தப் பயணியர் மீதே இருந்தது. கைக் குட்டையின் விலையை மந்திரம் போல திரும்பத் திரும்பச் சொன்னபடி புதுப்புதுப் பயணியரை நாடி நடந்து கொண்டே இருந்தாள்.  பார்வையாளர்கள் அனைவரையும் ஈர்த்திழுக்கிற உலக அதிசயம் அவளை ஒரு விழுக்காடு அளவு கூட அசைக்கவில்லை.  அந்தத் திசையைக் கூட அவள் திரும்பிப் பார்க்கவில்லை. கைக்குட்டைகளை வாங்கும் முகத்தை அந்தக் கூட்டத்தில் கண்டு பிடிப்பதிலேயே அவள் பார்வை குறியாக இருந்தது. 

திரும்பி நடந்தபோது தாஜ்மகாலைக் கண்டு களித்த நினைவுகளுக்கு இணையாக அவள் நினைவும் வந்தபடி இருந்தது. "பசி வந்திடப் பத்தும் பறந்துபோம்' பாட்டை ஒருமுறை மனம் சொல்லிக் கொண்டது. பசியை அண்ட விடாமல் இருப்பதற்கும் அண்டிவிட்ட பசியைத் துரத்துவதற்கும் அச்சிறுமி நடத்தும் போராட்டம் வேதனையானது.  வயிறு குளிர்ந்தால்தான் மனம் வேறு திசையில் திரும்பும். அக்கினியாக கொழுந்து விட்டு எரியும் வயிற்றோடு மனத்தை எந்தப் புள்ளியின் மீதும் குவிக்க முடிவதில்லை. இதற்குப் பிறகு பல இடங்களில் இப்படிப்பட்ட காட்சிகளை பல முறை பார்க்க நேர்ந்ததுண்டு. சம்பந்தப்பட்ட இடங்களைப் பார்த்த மனநிறைவும் அதற்கு நிகரான மனபாரத்தையும் சுமந்தபடி ஊர் திரும்புவது வழக்கமாகிவிட்டது.

http://writerpaavannan.blogspot.com/

முக நூலிலிருந்து....


வாழ்க்கைத் தேடலில் தொலைக்கக் கூடாத மிகப் பெரிய புதையல்...மன அமைதி.

மாரியப்பன்

காலத்தை நிறுத்தி ஆணியடிக்கும்...
கவிதைச் சுத்தியல்.

நா.வே.அருள்

உன்னைத் தேவையில்லை என்று முடிவுகட்டி விட்டவர்களுக்கு...
நீ எதைச் செய்தாலும் தப்பாகவே இருக்கும்.

ஜெயபிரகாஷ்

அலைகளில் சல்லாபமாக மிதந்தாடிய தக்கை...
ஒருபோதும் தனக்கான மீனைப் பிடித்ததில்லை.

யவனிகா ஸ்ரீராம்

மௌனமே சிறந்த மொழியாகிறது...
மனத்தால் காயம்பட்ட இதயங்களுக்கு

வைகை ராமசந்திரன்

யாராவது நம்மள டியர், செல்லம்னு பப்ளிக்கா கூப்பிட ஆரம்பிச்சதும், 108 சமூக ஆர்வலர்கள் உருவாகி, அந்த புள்ளைக்கி 1008 அட்வைஸ குடுக்க ஆரம்பிச்சிடுறாங்க...அடேய் அது என்னோட பேக் ஐடிடா.

ஜோ ரூஸோ

சுட்டுரையிலிருந்து...

தோல்விகள்  கண்ட   இதயம்,
வெற்றியைக் கண்டாலும்...
கொண்டாடுவது  இல்லை.
மேலும் முன்னேறவே  துடிக்கும்.

தமிழ் இலக்கியா

விடை தெரிந்தே வீசப்படும் வினாக்களுக்கு...
மெளனங்களே மிகச் சிறந்த விடையாகும்.  

மழைக்குருவி

நல்லுள்ளங்களிடம் உங்கள் மூளையை
"ஆன்' செய்து வையுங்கள்...
போலி உறவுகளிடம் உங்கள் எண்ணங்களை 
"ஆப்' செய்து விடுங்கள்.

கீச்சு திருடன் 


பெண்களின் நீண்ட நேர தூக்கத்திற்கு புகழ் பெற்ற ஒரே இடம்...தாய் வீடு. வேறெங்கும் கிளைகள் கிடையாது. 

வனிதா 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com