
இளைய தளபதி விஜய், சீயான் விக்ரம் போன்ற முன்னணி நடிகர்கள் ஒரு பொருளை விளம்பரப்படுத்தும் போது அதன் விற்பனை விகிதம் பல மடங்கு அதிகரிப்பது தெரிந்த விஷயம்தான். அதனால்தான் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் தயாரிப்பை மக்களிடம் கொண்டு செல்ல பிரபலமானவர்களை நாடுகின்றன. அந்த வகையில் கோகோ கோலா நிறுவனம் இளைய தளபதி விஜய், விக்ரம் என்று பல பிரபலங்களைக் கொண்டு தங்களின் குளிர்பானத்தை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்திருக்கிறது. இப்போது, ஜெர்மனி வாழ் இந்தியர்களிடம் தங்களின் குளிர்பானத்தை பிரபலப்படுத்த இந்திய உணவை வைத்து விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள்.
ஜெர்மனியில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் வாழ்கிறார்கள். 2011-ல் ஜெர்மனி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட, திறமையானவர்களுக்கு கொடுக்கப்படுகின்ற Blue Card வைத்திருப்போர்களில் 30 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்தியர்களே. இப்படி இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை அறிந்து கோகோ கோலா நிறுவனம் ஜெர்மனியில் புதுவிதமாக தங்களின் குளிர்பானத்திற்கு விளம்பரம் செய்துள்ளது.
அந்த புதிய விளம்பரத்தில் ஒரு இந்தியர் கையில் கோகோ கோலா வைத்திருப்பதுடன், அவர் அருகில் 'தாலி' (Thali) என்ற இந்தி வார்த்தையும் அதற்கேற்றார் போன்ற இந்திய உணவும் இடம் பெற்றுள்ளது. இந்த விளம்பரம் மூலம் அவர்கள் இந்திய மக்களை கவன ஈர்ப்பு செய்யும் அதே வேளையில் ஜெர்மனியில் இருக்கும் இந்திய ரெஸ்டாரெண்ட்களில் 'தாலி' உணவை சாப்பிட வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது இவர்களுக்கு கிடைத்திருக்கும் பம்பர் பரிசு!
- ஜேசு ஞானராஜ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.