எவர் முந்திக் கொள்வாரோ?

கேரளம் பலாப்பழத்தை தனது மாநிலப் பழமாக அறிவித்ததைத் தொடர்ந்து, இன்றைய செய்தி சொன்னது
எவர் முந்திக் கொள்வாரோ?

வலைதளத்திலிருந்து...

கேரளம் பலாப்பழத்தை தனது மாநிலப் பழமாக அறிவித்ததைத் தொடர்ந்து, இன்றைய செய்தி சொன்னது அன்னாசிப் பழத்தை திரிபுரா மாநிலம் அறிவித்துள்ளதாக. பண்டு எனும் மாம்பழத்தை தெலங்கானா தனது மாநில பழமாக அறிவித்துள்ளது. மராத்திய மாநிலம் அல்போன்ஸா என்றும் ஆப்புஸ் என்றும் வழங்கப்பெறும் மாங்கனியை அறிவித்துள்ளது. கர்நாடகமும் ஆந்திரமும் ஏற்கெனவே ஏதேனும் ஒரு கனியை அறிவித்திருக்கலாம், அல்லது அறிவிக்கலாம். கோவா முந்திரி எனப்படும் கொல்லா மாவை அறிவிக்கலாம். சீத்தாப்பழம் வட மாநிலங்களிலும் வளரும் பயிர்தான். எவர் முந்திக் கொள்வாரோ? பேரீச்சை கொய்யா, நாவல், ஆப்பிள் கலிங்கர் எனத் தொடரலாம். தமிழ்நாடு வாழைப்பழத்தைக் கொண்டாடக் கூடும். வாழையைக் கூட, ஓடிசாவோ வங்காளமோ கொண்டாட முடிவு செய்யலாம். பனை ஒன்று பாக்கி இருக்கும். அது தமிழ் மாநில மரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பனம் பழத்தின் சுவையை உண்டு பார்த்தவரே அறிவார். "பழம் படு பனை'என்று பாடல் வரியே உண்டு. 

கும்பமுனியைக் கேட்டால், உண்ணிப்பழம், பூலாத்திப் பழம், காராம் பழம், கள்ளி பழம், மஞ்சணத்தி பழம், வேப்பம் பழம், அத்திப்பழம், ஆலம்பழம், அரசம்பழம், புளியம்பழம், கொடுக்கா புளி, பப்பாளிப் பழம், கருவேப்பிலைப் பழம் என ஏதேனும் கிறுக்குத்தனமாகச் சிபாரிசு செய்வார்.

https://nanjilnadan.com

**

ஃப்ராய்ட்  மனித "அடிமனம்' (Unconscious) பற்றி நிறைய எழுதி உள்ளார். அதன் விளைவாகத்தான் "எடிபஸ் காம்ப்லெக்ஸ்',  "எலெக்ட்ரா காம்ப்லெக்ஸ்' போன்ற மன பாதிப்புகள் குறித்து விவாதித்திருக்கிறார். "அடி மனம்'(mind)  என்று ஒன்றை உறுதிப்படுத்துகிறது.  "மனம்' எனும்போது  அது ஒரு  abstract   நிலையில் வைத்துதான் பேசுகிறோம். 

ஆனால் நவீன விஞ்ஞானம்  நம் எண்ணங்கள், உணர்வுகள், செயல்பாடுகள் அனைத்தும் மூளையைச் (Brain)  சார்ந்துதான் உருவாகின்றன என்பதால், "மனம்' என்கிற ஒரு abstract கருத்தோட்டத்துக்கு இடமில்லை என்கிறது.

மூளை தலைமைக் காரியாலயம் என்றால் , அது  கை,கால் போன்ற மனித உறுப்புகளுக்குச் சில அவசர நேரங்களில் தன்னிச்சையாகச் செயல்பட அதிகாரம் அளித்திருக்கிறது. சிவப்பு  விளக்கைக் கண்டதும் நாம் ஓட்டும் வாகனத்துக்கு "ப்ரேக்' போடுவது, நடக்கும் போது எதாவது தடுக்கினால், கீழே விழாமல் சமாளிப்பது போன்ற செயல்பாடுகள்.  ஆனால் இவை அனைத்தும் பரும (Concrete)  நிலையில் இருக்கும் மூளையின் செயல்பாடே தவிர "மனம்' என்ற ஒரு கற்பிதத்துக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்கிறார்கள் இக்கால ஞானிகள். ஆகவே  ஃப்ராய்ட் குறிப்பிடும் "அடிமனத்தை' மூளையோடு இணைத்துப் பார்க்க வேண்டுமே தவிர, "மனம்' என்கிற ஒரு abstraction   தேவையில்லை என்பது  அவர்கள் வாதம். 

அதாவது சுருக்குமாகச் சொல்லப்போனால், அவர்கள் கருத்தின்படி, மனிதன் இயற்கையால் உருவாக்கப்பட்ட ஒரு ரோபாட்! 

https://indiraparthasarathy.wordpress.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com